இந்தியாவின் இசைக் குயிலுக்கு இன்று பிறந்த நாள்!

சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

லதா மங்கேஷ்கர் : இந்தியாவின் இசைச் குயில் என்று அனைவராலும் அழைக்கபடும் லதா மங்கேஷ்கர் இன்று தனது 89 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இசைக்குயில் லதா மங்கேஷ்கர்:

இந்திய சினிமாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக ஒலித்த குரல் லதா மங்கேஷ்கரின் இசைக்குயில்.  இத்தகைய குயிலுக்கு இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

தனது 13  வயதில் சினிமாத் துறையில் காலடி எடுத்து வைத்த லதா  மங்கேஷ்கரின் குரலுக்கு இன்று வரை ரசிகர்கள் ஏராளம்.  அவரது குரலுக்கு மயங்கிய ரசிகர்களே இல்லை என்றும் கூறலாம்.  இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா, திரையுலகின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே, 3 தேசிய விருதுகள், 6 பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் இப்படி பல விருதுகளை, அங்கிகாரங்களை தனதாக்கியவர் லதா மங்கேஸ்கர்.

இந்திய இசையுலகில் தனித்த அடையாளத்துடன் வலம் வரும் ”ஆஷா போஸ்லே” லதா மங்கேஷ்கரின் சகோதரி என்பது எத்தனை பேருக்கு தெரியும். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

1999ஆம் ஆண்டு லதா மங்கேஷ்வரை மாநிலங்களவை உறுப்பினராக்கிய இந்திய அரசு அழகு பார்த்தது. கிட்டதட்ட 20 மொழிகளில் பாடியுள்ள இவர், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளது.

லதா மங்கேஷ்கர் “ராம் ராம் பவ்ஹான” என்ற திரைப்படத்தின் மூலம் இசையாமைப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்தார்.முழு நேர பாடகியாக கலைத்துறைக்கு தன்னை அர்ப்பணம் செய்துகொண்ட லதா மங்கேஷ்கர், திருமணம் செய்துகொள்ளவில்லை.  89 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் லதா மங்கேஷ்கருக்கும்  சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close