இரவில் நீங்கள் தூங்காமல் இருப்பது, பல்வேறு சிக்கலை ஏற்படுத்தும். மேலும் இதனால் நீங்கள் காலையில் சாப்பிட மாட்டீங்கள், இரவு நேரம் கழித்து சாப்பிடுவீர்கள். இதனால் உடல் எடை அதிகமாகும். டைப் 2 டயபடிஸ் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகளிலும் இரவில் அதிக நேரம் தூங்காமல் இருப்பவர்களை மட்டும்தான் சர்க்கரை நோய் பாதிப்பதாக கூறப்படுகிறது.
நமது உடலின் சர்க்காடியன் ரிதம் என்ற சீரான ஒரு இயங்குதலை நடத்துகிறது. இரவில் சரியாக தூங்காமல் இருப்பவர்களுக்கு இந்த ரிதம் பாதிக்கப்படும். இதனால் ரத்த சர்க்கரை அதிகரிக்கலாம்.
சரியான அளவில் தூக்கம் இல்லாமல் இருப்பது, இன்சுலின் செய்படுவதை ஏற்றுக்கொள்ளும் தன்மையை குறைக்கிறது. இதனால் இன்சுலின் செயல்படுவதை உடல் ஏற்றுக்கொள்ளாது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படும்.
நடு இரவில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது உடல் நிலையை பாதிக்கும். இந்த ஸ்நாக்ஸில் உள்ள சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்பு சத்து உடல் எடையை அதிகரிக்கும் இதனால் சர்க்கரை நோய் ஏற்படலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“