லேட்நைட் தூங்குபவரா நீங்கள்? பக்க விளைவுகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க!

திரைப்படம் பார்க்கும் பழக்கம், ரீல் ஸ்க்ரோல் செய்வது போன்றவை தூக்கத்தை குறைத்து, ஹார்மோன் சமநிலை, மனநிலை, குடல் ஆரோக்கியம், ஞாபக சக்தி ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.

திரைப்படம் பார்க்கும் பழக்கம், ரீல் ஸ்க்ரோல் செய்வது போன்றவை தூக்கத்தை குறைத்து, ஹார்மோன் சமநிலை, மனநிலை, குடல் ஆரோக்கியம், ஞாபக சக்தி ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
download (64)

நீங்கள் ரீல்கள் ஸ்க்ரோல் செய்வது, உங்களுக்குப் பிடித்த திரைப்படங்களைப் பார்ப்பது அல்லது மொபைலில் நேரம் கழிப்பது போன்ற காரணங்களால் ஒவ்வொரு நாளும் தாமதமாக தூங்கும் பழக்கத்தில் உள்ளவரா? இந்த ஒரு பழக்கத்தால் உடல் நலத்தில் ஏற்படும் மாற்றங்கள் மிக அமைதியாக, கவனிக்க முடியாத விதத்தில் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.

Advertisment

போதுமான தூக்கம் இல்லாமல் இருக்கும்போது, உடலின் இயற்கையான செயல்முறை (பயாலஜிகல் ரிதம்) தடுமாறும். அதன் விளைவாக, பல்வேறு உடல்நலக் குறைகளும், மனநிலை பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதனால், தினசரி இரவில் தாமதமாக உறங்கும் பழக்கத்தால் ஏற்படக்கூடிய முக்கியமான பக்கவிளைவுகள் குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

உடல் எடை அதிகரிப்பு: தாமதமாக தூங்கும் பழக்கம், தூக்க நேரத்தை குறைத்து, பசியைக் கட்டுப்படுத்தும் லெப்டின் மற்றும் கிரெலின் ஹார்மோன்களின் சமநிலையை பாதிக்கிறது. இதனால் பசி அதிகரித்து, நள்ளிரவில் சிற்றுண்டி சாப்பிடும் பழக்கம் உண்டாகலாம். மேலும், தூக்கக் குறைவால், உடல் அதிக கலோரி உள்ள உணவுகளை விரும்பக்கூடும். இதனால் காலத்துக்கேற்ப உடல் எடையும் அதிகரித்து, டயாபடீஸ் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.

மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்: தாமதமாக தூங்குவது, தூக்கக் குறைவால் மனநிலையை பாதித்து, எரிச்சல், சோர்வு, ஆற்றல் குறைபாடு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது தொடர்ந்து ஏற்பட்டால், மனச்சோர்வுக்கும் காரணமாக இருக்கலாம். உணர்வுகளை பராமரிக்கும் மூளையின் செயல்பாடும் இதனால் குறைகிறது.

Advertisment
Advertisements

istockphoto-619269222-612x612

கார்டிசால் அளவுகள் அதிகரிப்பு: தொடர்ச்சியாக இரவு தாமதமாக தூங்குவது, உடலில் கார்டிசால் எனும் மன அழுத்த ஹார்மோனின் அளவை அதிகரிக்கிறது. இதனால், மன அழுத்தம் மற்றும் பதட்டம் அதிகரித்து, அதை சமாளிக்கும் உடலின் திறன் குறைகிறது. நீண்ட காலமாக இது தொடர்ந்தால், மூளைபருமன் குறைந்து, ஞாபக சக்தி மற்றும் அறிவுத்திறனிலும் பாதிப்பு ஏற்படலாம்.

கவனிப்புத்திறன் மற்றும் முடிவு எடுக்கும் திறனில் பாதிப்பு: இரவு தாமதமாக தூங்குவதால் மூளையில் மந்தநிலை உருவாகி, நாள்பட்ட செருக்கும் மற்றும் கவனம் செலுத்தும் திறனில் குறைபாடு ஏற்படுகிறது. மேலும், 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால், ஞாபக சக்தி, பிரச்சனை தீர்க்கும் திறன், மற்றும் முடிவெடுத்தல் போன்ற அறிவுத் திறன்களையும் பாதிக்கிறது.

istockphoto-1143952151-612x612

குடல் ஆரோக்கியத்தில் சிக்கல்: போதுமான தூக்கம் இல்லாததால், குடல் நலன் பாதிக்கப்படும். இது ஹார்மோன்கள் சமநிலையை சீர்குலைக்க, செரிமானம் மற்றும் மெட்டபாலிசத்திலும் தொந்தரவு ஏற்படுகிறது. தொடர்ந்து தூக்கமின்றி இருப்பது குடல் நுண்ணுயிரிகள் சமநிலையை குழப்பி, செரிமான கோளாறுகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

இதற்க்கு என்ன தான் தீர்வு?

நல்ல உடல்நலனுக்காக தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தினமும் 7 முதல் 9 மணி நேரம் தூங்குவது ஹார்மோன் சமநிலை, குடல் மற்றும் மனநலத்தை பாதுகாக்க உதவும். தூங்கும் நேரத்திற்கு குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன் மொபைல், டிவி போன்ற ஸ்கிரீன்களை தவிர்த்து, அமைதியான சூழலை உருவாக்குவது உறக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: