Advertisment

நடிகை அனுஷ்காவுக்கு அரிதான 'சிரிக்கும் நோய்': இந்த நிலைமை உங்களுக்கும் இருக்கா?

சிரிப்பு சிறந்த மருந்து என்று நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு அது ஒரு கோளாறு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anushka Shetty

Anushka Shetty

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சிரிப்பு சிறந்த மருந்து என்று நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு அது ஒரு கோளாறு.

Advertisment

இன்டியாகிளிட்ஸ் வீடியோ நேர்காணலில், ஷெட்டி ஒரு அரிதான சிரிக்கும் நிலையால் அவதிப்படுவதை வெளிப்படுத்தினார். எனக்கு சிரிப்பு நோய் உள்ளது. சிரிப்பது ஒரு பிரச்சனையா?’ என நீங்கள் யோசிக்கலாம். நான் சிரிக்க ஆரம்பித்தால், 15 முதல் 20 நிமிடங்கள் வரை என்னால் நிறுத்த முடியாது. நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கும்போது அல்லது ஷூட்டிங் போது, ​​நான் தரையில் உருண்டு சிரிப்பேன். இதனால் படப்பிடிப்பு பலமுறை நிறுத்தப்பட்டது”, என்றார்.

இது என்ன நிலைமை?

"சிரிக்கும் நோய்" மருத்துவத்தில் சூடோபுல்பார் பாதிப்பு (pseudobulbar affect) என்று அழைக்கப்படுகிறது என்கிறார் நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார். சூடோபுல்பார் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களில் திடீர் சிரிப்பு அல்லது அழுகை பொதுவான அறிகுறிகள். இவை பல நிமிடங்கள் நீடிக்கும் (பொதுவாக 15-20 நிமிடங்கள்)

அடிக்கடி, சிரிப்பதற்கான தூண்டுதல் காரணி சிறியதாக இருக்கலாம், அங்கு இருக்கும் மற்றவர்களுக்கு இது அவ்வளவு வேடிக்கையாக இருக்காது, எனவே, சிரிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நபர் தனது ரியாக்ஷனை நினைத்து வெட்கப்படுவார், என்று அவர் குறிப்பிட்டார்.

சிரிப்பு நோய்க்கான அடிப்படைக் காரணங்கள்

laughter disease

மோட்டார் நியூரான் நோய் (MND)/அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் (ALS), மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (MS), மூளை பக்கவாதம், மூளைக் கட்டி அல்லது அதிர்ச்சிகரமான மூளைக் காயம் போன்ற பல நரம்பியல் கோளாறுகள் சூடோபுல்பார் பாதிப்பை ஏற்படுத்தும்.

பல சந்தர்ப்பங்களில் இது, மூளை அல்லது நரம்பியல் நோய் இல்லை. இந்த நிகழ்வுகளில், இந்த நிலை நரம்பியக்கடத்திகளில் உள்ள ஏற்றத்தாழ்வுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது, இதன் விளைவாக மூளை நரம்பியல் பாதைகளில் (cerebro-ponto-cerebellar pathways) செயலிழப்பு ஏற்படுகிறது.

இந்த நிலைக்கான சரியான காரணம் வேறுபட்டிருக்கலாம், சில சந்தர்ப்பங்களில், தோற்றம் அடையாளம் காணப்படவில்லை.

இந்த வலிப்புத்தாக்கங்கள் எப்பொழுதும் வலிப்பு போன்ற பொதுவான வலிப்பு அறிகுறிகளுடன் இருக்காது, இது நோயறிதலை சவாலாக ஆக்குகிறது, என்று டாக்டர் வினித் பங்கா கூறினார். (associate director- neurology and head neurointervention, BLK Max Hospital)

சிரிப்பு நோய், ஒரு மனநோய் என்று தவறாகக் கொள்ளலாம். எனினும், அது அப்படி அல்ல. "சூடோபுல்பார் பாதிப்பு (அல்லது சிரிக்கும் நோய்) பித்து அல்லது மனச்சோர்வு போன்ற மனநிலைக் கோளாறுகளுடன் குழப்பமடையலாம். சூடோபுல்பார் பாதிப்பில், அறிகுறிகள் சில நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கும், மேலும் நபரின் மனநிலை சாதாரணமாக இருக்கும்.

மாறாக, மனநிலைக் கோளாறுகள் நாள் முழுவதும் அறிகுறிகளைக் காட்டுகின்றன. சூடோபுல்பார் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை மனநோயியல் இல்லை, எனவே இது ஒரு மனநோயாக கருதப்படுவதில்லை, என்று டாக்டர் குமார் கூறினார்.

இருப்பினும், அறிகுறிகள், மூளை செயலிழப்புடன் தொடர்புடைய காரணங்கள் என்பதால், இது ஒரு நரம்பியல் மனநல நோயாக கருதப்படுகிறது.

சிகிச்சை

சிரிக்கும் போது ஆழ்ந்த, தளர்வான மற்றும் மெதுவான சுவாசம் உதவும். உங்கள் மனதை வேறு பக்கம் திருப்புவதும் உதவும். தோள்பட்டை, கழுத்து மற்றும் மார்புச் சுவரைச் சுற்றியுள்ள தசைகளைத் தளர்த்துவதும் உதவியாக இருக்கும்.

இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப்பட்ட சில மருந்துகள் உள்ளன. குறிப்பிட்ட சிகிச்சை ஆலோசனைக்கு மருத்துவரை அணுகவும், என்று டாக்டர் குமார் கூறினார்.

Read in English: When Baahubali actor Anushka Shetty revealed she has a rare ‘laughing disease’; know more about it

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment