பெண்களையும், கூந்தலையும் பிரிக்க முடியாது. டீன் ஏஜ் பெண்கள் முதல் வயதான பாட்டி வரை, தங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனிப்பதை விட, கூந்தல் நன்றாக இருக்கவும், வளரவும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மெனக்கெடுகின்றனர்.
ஆனால், எவ்வளவு தான் தலைமுடி நன்றாக வளர்ந்தாலும், சில நேரங்களில் என்ன ஹேர் ஸ்டைல் செய்வது என்று பல பெண்களுக்கு குழப்பமாக இருக்கும்.
இங்கு சீரியல் நடிகை லாவன்யா கர்டெய்ன் பேங்ஸ் ஹேர் ஸ்டைலில் நியூ லுக்கில் இருக்கும் வீடியோ, புகைப்படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இங்கே பாருங்க
லாவன்யா ஒருமுறை அவள் கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தன்னுடைய சரும மற்றும் முடி பராமரிப்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.
’நெல்லிக்காய் ரொம்ப நல்லது. நீங்க எவ்வளோ நெல்லிக்காய் எடுத்துக்கிறீங்களோ, அந்தளவுக்கு உங்க உடம்புல இருக்க நச்சுத்தன்மை நீங்கும். அதேநேரம், உங்க சருமமும் பளபளப்பாகும். நான் நெல்லிக்காய் ரொம்ப அதிகமா எடுத்துப்பேன்.
அடுத்து கறிவேப்பிலை ஜூஸ்.
கறிவேப்பிலை ஜூஸ் எல்லா நாளுமே எடுத்துக்கக் கூடாதுனு சொல்லுவாங்க. கறிவேப்பிலை முடியை கருப்பாக்கும் எல்லாருக்கும் தெரியும். ஆனா, அதையும் தாண்டி அது நம்ம சருமத்துல இருக்க பிளாக் மார்க்ஸ் எல்லாத்தையும் எடுத்துடும்.
நான் கற்றாழை அதிகமா எடுத்துப்பேன். நம்ம உடம்போட வெப்பநிலைய கற்றாழை நல்ல பராமரிக்கும். இதை கொஞ்சம் கொஞ்சமா உங்க டயட்ல சேர்த்துக்கலாம். நான் குளிக்கிறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கற்றாழை ஜெல் எடுத்து என் முடியில அப்ளை பண்ணிட்டு விட்டுருவேன்.
கற்றாழை எடுத்து, அதோட தோலை நீக்கி ஓடுற தண்ணீல 7-8 முறை கழுவி சாப்பிடலாம். ஒழுங்கற்ற மாதவிடாய், வயிறு வலி இருக்கிறவங்க ரெகுலரா கற்றாழை சாப்பிடும் போது, இந்த பிரச்சனை எல்லாம் சரியாயிடும்.
கற்றாழை ஜெல், சீரகம், குறுமிளகு சேர்த்து நல்ல அரைச்சு அதை வடிகட்டி, அதோட தயிர் சேர்த்து குடிக்கலாம்.
இவ்வாறு பல விஷயங்களை லாவன்யா அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“