சுவையான எலுமிச்சை துவயல் ரெசிபி. இது செம்ம சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு
உளுந்தம் பருப்பு
எலுமிச்சை பழம்
காய்ந்த மிளகாய்
நல்லெண்ணை
உப்பு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும். தொடர்ந்து காய்ந்த மிளகய்யை சேர்க்கவும். நன்றாக வறுபடும் வரை காத்திருக்கவும். இந்நிலையில் 2 எலுமிச்சை பழத்தின் சாறை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இந்த சாறை வறுத்த பொருட்களுடன் சேர்த்து அரைக்க வேண்டும். தண்ணீர் விடக்கூடாது. இந்நிலையில் தனியாக பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பும், கடலை பருக்கு கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும். சுவையான எலுமிச்சை துவயல் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“