நம் அனைவரது வீட்டிலும் சில லெதர் ஆடைகளாவது இருக்கும். திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு கோட், சூட் அணியாத மணமகனை தமிழகத்தில் பார்க்க முடியாது. அதேபோல மழைக் காலத்திலும் கூட நாம் லெதர் ஜாக்கெட் அணிந்து தான் வெளியே செல்கிறோம்.
லெதர் மிகவும் நீடித்த, வசதியான, வாட்டர் ரெசிஸ்டெண்ட் மற்றும் ஆடம்பரமான ஜவுளி. இருப்பினும், அது அப்படியே சிறந்த தரத்தில் இருக்க சரியான பராமரிப்பு தேவை.
சில எளிய முறைகளைப் பின்பற்றுவதன் மூலமும் உங்களுக்குப் பிடித்த லெதர் ஜாக்கெட் அல்லது காலணிகளை பல ஆண்டுகளாக அப்படியே வைத்திருக்கலாம்.
ஜவுளி ஆராய்ச்சியாளரும், ஆர்டிசி ப்ராஜெக்ட், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT), புது தில்லியின் கண்டெண்ட் மேனஜரும் ஆன டாக்டர் திவ்யா சிங்கால் குப்தா, லெதர் மற்ற ஜவுளித் துணிகளிலிருந்து வேறுபட்டவை என்பதால் சிறப்பு கவனிப்பும் பராமரிப்பும் தேவை, என்றார்.
உண்மையில், அவை நம் சருமத்தைப் போலவே இருக்கின்றன, இயற்கை எண்ணெய்களைக் கொண்டிருக்கின்றன, அவை மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும். இந்த இயற்கை எண்ணெய் காலப்போக்கில் வறண்டு போகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது அவசியம்.
உங்கள் லெதர் ஆடைகள் புதியதாக இருக்க
லெதர் எப்போது டிரையாக இருக்க வேண்டும். மழைக்காலங்களில் அவற்றை அணிவதைத் தவிர்க்கவும். அவை ஈரமாகிவிட்டால், மென்மையான துணியால் மெதுவாக துடைத்து, நிழலில் உலர வைக்கவும்.
லெதர் ஜாக்கெட்டுகளை மடக்கி வைப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் அதில் மடிப்பு மற்றும் விரிசல் விழுந்துவிடும்.
/indian-express-tamil/media/media_files/degdVVzhabYU45JeGlqW.jpg)
ஜாக்கெட்டுகளை உங்கள் அலமாரியில் தொங்கவிட, பேடட் ஹேங்கர்களைப் (padded hangers) பயன்படுத்தவும். கம்பி அல்லது பிளாஸ்டிக் ஹேங்கர்களைப் பயன்படுத்த வேண்டாம்; அவை உங்கள் ஜாக்கெட்டின் வடிவத்தை சிதைக்கும், குறிப்பாக தோள் பகுதியில். லெதர் ஜாக்கெட் மூச்சு விட கொஞ்சம் கொடுப்பது முக்கியம், எனவே அலமாரிக்குள் பல ஆடைகளை திணிக்க வேண்டாம்.
லெதர் பொருட்களை நேரடி சூரிய ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து விலக்கி வைக்கவும், ஏனெனில் இது லெதர் உடையக்கூடிய மற்றும் விரிசல்களை ஏற்படுத்தும்.
லெதர் துணிகளை ஒருபோதும் வீட்டில் துவைக்க கூடாது, உள்ளூர் டிரை கிளீனர்களில் டிரை வாஷ் செய்யவும் கூடாது. லெதர் பொருட்களை சுத்தம் செய்வதற்கான தொழில்முறை சேவைகளைத் தேடுவது முக்கியம்.
லெதர் காலப்போக்கில் அதன் இயற்கையான ஈரப்பதத்தை இழக்கிறது. நல்ல தரமான லெதர் கண்டிஷனரை அவ்வப்போது பயன்படுத்துவதன் மூலம் இதைத் தடுக்கலாம். இது பல ஷூ/பேக் கடைகளில் எளிதாகக் கிடைக்கும்.
லெதர் ஜாக்கெட்டை அயர்ன் செய்வதைத் தவிர்ப்பது நல்லது, ஆனால் தேவைப்பட்டால், குறைந்த வெப்பநிலையில் அயர்ன் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“