வீட்டில் உள்ள மீந்து போன சாதத்தில் ரொம்ப சுவையாக சிப்ஸ் செய்ய முடியும். அதன் ரெசிபியை தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
மீந்துபோன சாதம்: 2 கப்
வெண்ணை: 2 டேபிள் ஸ்பூன்
உப்பு : ½ டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு: 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர்: ½ டேபிள் ஸ்பூன்
செய்முறை : ஒரு மிக்சியில் சாதம், வெண்ணை, தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரைத்ததை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் அரிசி மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
தொடர்ந்து பால் பாக்கெட் அல்லது பிளாஸ்டிக் கவரை கோன் போல் செய்து கொண்டு. அதில் இந்த மாவை கொட்டவும். தொடர்ந்து கத்திரிக்கோலால் கிழே வெட்டவும். மைக்ரோவேவ் அவன் டிரேவை எடுத்துக்கொள்ளவும். தொடர்ந்து மாவை பொட்டுகள் போல டிரே முழுவதும் புள்ளிகளாக வைக்கவும். அதற்கு மேலாக பட்டர் பேப்பர் போட்டி ஸ்பூனால் வட்டமாக அழுத்தவும். தற்போது எல்லாம் சிப்ஸ் போல் ஆகும்.
தொடர்ந்து அவனை 170 டிகிரியில் ஃப்ரீ ஹீட் செய்து இந்த டிரேவை வைக்கவும். 20 முதல் 25 நிமிடங்கள் கழித்து எடுத்தால் சுவையான சிப்ஸ் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“