Advertisment

சமையலுக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரம் பயன்படுத்துறீங்களா? அப்போ இந்த தகவல் உங்களுக்கானது...

சமையலுக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை பயன்படுத்துவோர், லைடன்ஃப்ராஸ்ட் விளைவு குறித்து தெரிந்து கொள்வது ஆரோக்கியமாகவும், திறம்பட சமைக்கவும் உதவும் என மருத்துவர் ப்ரளி ஸ்வேதா தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Stainless steel pan

சமையல் என்பது ஒரு கலை; ஆனால், அதில் அறிவியலின் ஆச்சரியப்படவைக்கும் கூறுகள் அடங்கியிருக்கிறது. அது போன்றதொரு தகவலை, ட்ரிக் ஃப்ரென்னொ என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர் சமையல் தொடர்பான தகவல்களை தொடர்ச்சியாக இணையத்தில் பதிவிட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை பயன்படுத்த அச்சப்படுபவர்கள், லைடன்ஃப்ராஸ்ட் விளைவு குறித்து அறிந்து கொண்டால் சிறப்பாக செயல்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: If you cook with stainless steel pans, you must know about the Leidenfrost effect

லைடன்ஃப்ராஸ்ட் விளைவு என்றால் என்ன?
எளிமையாகக் கூறினால், நாம் சமைக்கும் உணவு பாத்திரத்தில் ஒட்டாமல் இருப்பதற்கு உதவும் ஒரு உத்தி என்று பொருள்கொள்ளலாம். "ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தினால், அதன் மேல் நீர்த்துளிகள் படும்போது, அவை உடனடியாக ஆவியாகாது. அதற்கு பதிலாக, நீர்த்துளிகள் அனைத்தும் சிறிய மணிகள் போன்று தோற்றமளிக்கும். நீர்த்துளியின் அடிப்பகுதி வெப்பநிலையின் காரணமாக விரைந்து ஆவியாவதால், அதன் கீழ்ப்பகுதி மெத்தை போன்று உருவாகிவிடுகிறது. இதனால், நீர்த்துளியின் மேல் பகுதி ஆவியாவதை அது தடுக்கிறது" என மருத்துவர் ப்ரளி ஸ்வேதா விளக்கமளித்துள்ளார்.

இந்த லைடன்ஃப்ராஸ்ட் விளைவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரம் இந்த வெப்ப நிலையை எட்டும்போது தான், அதில் சமையல் பணிகளை மேற்கொள்வதற்கேற்ற தருணமாக பார்க்கப்படுகிறது. 

"ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் சூடு ஏறாமல் இருந்தால், உணவு அதில் ஒட்டிக் கொள்ளும். லைடன்ஃப்ராஸ்ட் விளைவு ஏற்பட்டதும், அதில் சமையல் செய்ய தேவையான அளவு வெப்பம் கிடைத்துவிட்டதாக அர்த்தம். இதன் மூலம் உணவு பொருள்கள் அதில் ஒட்டாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்". என மருத்துவர் ப்ரளி தெரிவித்துள்ளார்.

இதனை சுகாதார கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டுமென மருத்துவர் ப்ரளி அறிவுறுத்துகிறார். சரியான வெப்பநிலையில் சமையல் செய்யும் போது, உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய காரணிகள் ஏற்படுவதை குறைக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உணவை சீராக சமைக்க முடியும் எனவும், ஊட்டச்சத்து சரியான விகிதத்தில் இருப்பதை உறுதி செய்ய முடியும் எனவும் ப்ரளி கூறுகிறார். எனவே, லைடன்ஃப்ராஸ்ட் விளைவு குறித்து அறிந்து கொள்வது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Lifestyle Cooking Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment