காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சூடான நீரில் எலுமிச்சை மற்றும் கிராம்பு கலந்து குடிப்பது நல்லது. இது இருமல் மற்றும் சளிக்கான வீட்டு வைத்தியம். இதன் நன்மைகள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.
MGM ஹெல்த்கேரின் தலைவரும், தலைமை உணவியல் நிபுணருமான விஜயஸ்ரீ தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், இந்த எளிய பானம் எப்படி சளி அறிகுறிகளைப் போக்க உதவுகிறது மற்றும் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
எலுமிச்சை மற்றும் கிராம்பு ஏன்?
"எலுமிச்சை அதன் உயர் வைட்டமின் சி உள்ளடக்கத்திற்கு அறியப்படுகிறது, இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் சளியை எளிதாக வெளியேற்ற உதவுகிறது.
கிராம்பு, மறுபுறம், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அவற்றில் யூஜெனால் மற்றும் கேலிக் அமிலம் போன்ற கலவைகள் உள்ளன, அவை ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்பட்டு செல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன ”என்று விஜய்ஸ்ரீ கூறினார்.
காலை காபிக்கு மாற்றாக எலுமிச்சை, கிராம்பு
உங்கள் காலை காபியை எலுமிச்சை மற்றும் கிராம்பு நீருக்கு மாற்றுங்கள். "பால் மற்றும் சர்க்கரையுடன் கூடிய ஒரு பொதுவான காபியில் 100-120 கலோரிகள் உள்ளன, அதேசமயம் எலுமிச்சை மற்றும் கிராம்பு நீரில் ஒரு டீஸ்பூன் தேனில் 20 கலோரிகள் உள்ளன" என்று விஜய்ஸ்ரீ கூறினார்.
கலோரி உட்கொள்ளலைக் குறைப்பது உங்கள் இலக்காக இருந்தால், இதை நிச்சயம் உங்களுக்கு உதவும்.
எலுமிச்சை, கிராம்பு நீர் எப்படி செய்வது?
முதலில் அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் வைத்து கொதிக்க விடவும். அதில் கிராம்பு போட்டு கொதிக்க விடவும்.
இப்போது தண்ணீரை எடுத்து ஆற வைக்கவும். வெதுவெதுப்பான வெப்பநிலையில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கவும். தண்ணீர் சூடாக இருக்கும்போது எலுமிச்சை சேர்ப்பதைத் தவிர்க்கவும். இப்படி செய்வது வைட்டமின் சி content பாதிக்கும் கசப்பை ஏற்படுத்தும். கடைசியாக சுவைக்கு தேன் சேர்க்கவும்.
ஆங்கிலத்தில் படிக்க: Swap your morning coffee for lemon and clove water to fight winter cold, cough
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“