/tamil-ie/media/media_files/uploads/2019/10/Lemon-Coriander-Soup.jpg)
lemon coriander soup
Lemon: இந்தியர்கள் எலுமிச்சைப் பழத்தை விரும்பி தமது உணவுகளில் சேர்த்துக் கொள்வார்கள். எந்த உணவின் சுவையையும் இந்த எலுமிச்சை மேலும் சிறப்படைய செய்து விடும். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான சிட்ரஸ் பழங்களில் ஒன்று. இதில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.
எலுமிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நோய் தாக்கங்களை எதிர்த்துப் போராடவும், சருமத்தை புத்துணர்ச்சியடையவும், எடை இழப்புக்கும் உதவும். எலுமிச்சையுடன் கொத்தமல்லி காம்பினேஷன் சூப்பரான ஒன்று. இதில் பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.
கொழுப்பின் அளவை இவைகள் கட்டுப்படுத்துகிறது. கொத்தமல்லியில் இரும்பு மற்றும் மெக்னீசியம் உள்ளது. எலுமிச்சையும் கொத்தமல்லியும் சேர்த்து செய்யப்படும் இந்த சிம்பிளான ரெசிபியை செய்து பாருங்கள்.
எலுமிச்சை கொத்தமல்லி சூப் செய்ய தேவையான பொருட்கள்
4 கப் ஸ்டாக்
2 மேஜைக்கரண்டி வெங்காயம்
2 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு
2 தேக்கரண்டி சில்லி சாஸ்
1 தேக்கரண்டி உப்பு
1 தேக்கரண்டி மிளகு
1 கப் தனியா
எலுமிச்சை கொத்தமல்லி சூப் செய்யும் முறை.
ஒரு பாத்திரத்தில் ஸ்டாக் சேர்த்து கொதிக்க விடவும், அதில் நறுக்கி வைத்த வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி மற்றும் மிளகு சேர்க்கவும். ஒரு நிமிடம் வரை கொதிக்க வைத்து பின் அடுப்பை சிம்மில் வைக்கவும். ஒரு கோப்பையில் மீதமுள்ள கொத்தமல்லியை தூவி, அதன் மேல் தயாரித்து வைத்த சூப்பை ஊற்றி பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us