மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களைக் குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது.
எலுமிச்சையில் பழம், விதை, தோல் அனைத்தும் மருந்தாகப் பயன்படுகிறது. எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கத்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு கப் நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரைக்குப் பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.
எலுமிச்சை பழங்கள் ஒரு மாதத்திற்கு புத்துணர்ச்சியுடன் இருக்க, அவற்றை எவ்வாறு சேமிப்பது என்பதற்கான உதவிக்குறிப்பு இங்கே.
ஒரு கண்ணாடி பாத்திரத்தை எடுத்து, அதில் தண்ணீர் நிரப்பவும், அதில் எலுமிச்சைகளை போட்டு, ஜாடியை மூடவும். இந்த வழியில், எலுமிச்சை நீண்ட காலத்திற்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
எலுமிச்சையிலிருந்து அதிக சாற்றைப் பெற, அவற்றை வெட்டுவதற்கு முன் மேசையில் வைத்து கையில் உருட்டவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“