குடல் இயக்கம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கான பாரம்பரிய தீர்வை உணவியல் நிபுணர் சோனியா நரங் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "ஒரு கிளாஸ் தண்ணீரில் கொஞ்சம் ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலக்க வேண்டும். அதை நன்கு கலக்கவும். இந்த கலவையை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். 4 வாரங்களில் முடிவு தெரியும்” என்று நரங் கூறினார்.
ஆலிவ் எண்ணெய்: சரும பளபளப்பு, குடல் இயக்கம்
இயற்கையான லூப்ரிகண்டாகச் செயல்பட்டு, மலம் வெளியேறுவதை எளிதாக்க உதவுகிறது. பித்த உற்பத்தியைத் தூண்டுகிறது. வைட்டமின் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட், சருமத்தை ஈரப்பதமாக்கவும், ஊட்டமளித்து ஆரோக்கியமான நிறத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
எலுமிச்சை சாறு
எலுமிச்சைச் சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் செரிமான உணர்வைத் தூண்டி, நல்ல செரிமானம் மற்றும் குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது கொலாஜன் உற்பத்திக்கு முக்கியமானது மற்றும் சரும ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Can having lemon juice and olive oil on an empty stomach relieve constipation?
இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், கறைகளின் தோற்றத்தை குறைக்கவும் உதவும். "இந்த கலவையுடன் உங்கள் நாளைத் தொடங்குவது உங்கள் உடலை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது, இது செரிமானம் மற்றும் சரும ஆரோக்கியம் ஆகிய இரண்டிற்கும் அவசியம்" என்று நரங் கூறினார்.
எப்படி சாப்பிட வேண்டும்?
இந்த இரண்டு பொருட்களையும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடலில் வைட்டமின் சி அளவு மேம்பட உதவும். ஆலிவ் எண்ணெய் அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு அறியப்படுகிறது என்று மருத்துவர், மூத்த ஆலோசகர் ஷிரீன் ஃபர்டடோ கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“