செம்ம சுவையான ரெடிமேட் மிக்ஸ், இதை வைத்து எலுமிச்சை சாதம் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
கால் கப் நல்லெண்ணை
1 ஸ்பூன் கடுகு
2 ஸ்பூன் கடலை பருப்பு
கால் கப் வேர்கடலை
2 கொத்து கருவேப்பிலை
5 பச்சை மிளகாய்
5 வர மிளகாய்
பெருங்காயாம் கால் ஸ்பூன்
1 ஸ்பூன் உப்பு
2 ஸ்பூன் மஞ்சள் பொடி
எலுமிச்சை சாறு அரை கப்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, கடுகு, கடலை பருப்பு, வேர்கடலை, பச்சை மிளகாய், வர மிளகாய், பெருங்காயம், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளரவும். இது 6 மாதம் வரை கெட்டுப்போகாது. ப்ரிஜில் வைக்கவும்.