சுவையான எலுமிச்சை தொக்கு ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எலுமிச்சைப் பழம் – 12
கல் உப்பு – தேவையான அளவு
மிளகாய்த் தூள் – 3 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம், பெருங்காயம் (வறுத்துப் பொடித்தது) – 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் எலுமிச்சைப் பழங்களை நன்றாகக் கழுவி துணியில் துடைத்து சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து அதில் உள்ள விதைகள் எல்லாம் எடுத்துவிட்டு ஒரு ஜாடியில் போட்டு உப்பைப் பொடித்து அதோடு கலக்கவும். 2 அல்லது 3 நாட்களுக்குப் பின் எலுமிச்சைத் துண்டுகளோடு மிளகாய்த் தூளையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
அரைத்தப் பின் தனியாக வைக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும். நன்றாக ஆறியபின் தாளித்த கடுகை ஜாடியில் போட்டு, பெருங்காயம், வெந்தயப் பொடியை சேர்த்து நன்கு கலக்கி விடவும். அவ்வளவு தான் சுவையான எலுமிச்சை தொக்கு ரெடி. சுடு சோற்றில் வைத்து சாப்பிட சுவை அள்ளும். உடலுக்கு இந்த தொக்கு நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“