/indian-express-tamil/media/media_files/fJgjLtc6Rh42Q6ez36wj.jpg)
மூட்டு வலி குணமாக சிறந்த 6 பானங்கள் குறித்து பார்க்கலாம்.
Natural ways to manage joint pain | மூட்டு மற்றும் தசை வலியை நிர்வகிக்க பயனுள்ள ஆயுர்வேத முறைகள் பல உள்ளன. இந்திய மக்களில் சுமார் 15-25% சதவீதத்தினர் தங்கள் 40-களின் முற்பகுதியில் மூட்டு அசௌகரியத்தை அனுபவிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், குடுச்சி ஆயுர்வேதத்தின் தலைமை மருத்துவர் டாக்டர் யமுனா பிஎஸ், இன்றைய வேகமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களின் விளைவாக அனைத்து வயதினரிடையேயும் மூட்டு மற்றும் தசைக் கோளாறுகள் அதிகரித்து காணப்படுவதாக கூறுகிறார்.
இது குறித்து அவர், “எங்கள் தொடர்ந்து மாறிவரும் வாழ்க்கை முறை தசைகளின் ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கலாம். குறிப்பாக நீண்டகால காயம் அல்லது தசைநார் கிழிதல்” ஆகியவை என்றார்.
மேலும், இந்த சிக்கல்களைத் தீர்ப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் அவற்றை நீண்ட நேரம் கவனிக்காமல் இருப்பது வீக்கம், விறைப்பு, இயக்கம் வரம்பு மற்றும் அதிக வலிக்கு வழிவகுக்கும்.
இந்த நிலையில் மூட்டு வலியில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும் 6 பானங்கள் குறித்து பார்க்கலாம்.
1) மஞ்சள் பால் : சூடான மிளகு மஞ்சள் பால் மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாகும். இதில சிறிதளவு தேன் கலந்தும் பருகலாம்.
2) செர்ரி பழச் சாறு: செர்ரி பழச் சாறு மூட்டு வீக்கத்தை குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
3) இஞ்சி தேநீர் : பால் கலக்காமல் இஞ்சி டீ பருகுவது நல்ல எதிர்ப்பு சக்தியை அளிக்கும். இதில் சூடான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்தும் அருந்தலாம்.
4) அண்ணாச்சி பழச் சாறு: ரூ.10க்கு கூட கிடைக்கும் பழம் அண்ணாச்சி. இந்தப் பழத்தின் சாறு மூட்டு மற்றும் தசைப் பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாக கருதப்படுகிறது. இந்த பழச்சாறு தயாரிக்கும்போது சிறிதளவு தண்ணீர் கலக்கலாம். எனினும் சீனி (சர்க்கரை) கலப்பதை தவிர்க்கலாம்.
5) எலும்பு சூப் : சிக்கன் அல்லது மாட்டு எலும்பின் சூப் உடலுக்கு சிறந்த சக்தியை கொடுக்கும் ஒரு பானமாகும். இது உடல் சோர்வுக்கு கூட நல்ல மருந்தாக கருதப்படுகிறது.
6) க்ரீன் டீ : ஆரம்ப காலக்கட்டங்களில் க்ரீன் டீ பொதுவாக உடல் மெலிய சிறந்த ஒன்றாக கருதப்பட்டது. ஆனால் இதை சரிவிகிதத்தில் எடுத்துக் கொண்டால், நீர்ச்சத்து குறைவுக்கும் நல்ல மருந்தாக பார்க்கப்படுகிறது. இது தசைகளுக்கும் வலிமை அளிக்கும் எனக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.