நீரிழிவு நோயாளிகள் சில உணவுகளை தவிர்ப்பது அவசியம். அதன்படி, சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், கார்போஹைட்ரேட் அதிகமான உணவுகள், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் நன்கு வறுக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் இவை நீண்டகால உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சில உணவுகள் சர்க்கரை அளவை அதிகரிப்பதில்லை. மாறாக இன்சுலின் சுரப்பை குறைப்பது. கொலஸ்ட்ராலை அதிகரிப்பது, வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குவது போன்ற சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய 3 முக்கியமான உணவுகள் குறித்து பிரபல ஆயுர்வேத நிபுணர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவை எந்தெந்த உணவுகள் என்பதை இப்போது பார்க்கலாம்.
தயிர்
தயிர் உடலில் கபதோஷத்தை அதிகரிக்கச் செய்து, உடல் எடையை அதிகரிக்கச் செய்வதோடு வளர்சிதை மாற்றத்தை குறைக்கும் எனகிறார் மருத்துவர் சவலியா.
ஆயுர்வேதத்தின்படி, மக்கள் நினைப்பதுபோல் தயிர் குளிர்ச்சியை ஏற்படுத்தாது. மாறாது அது சூட்டை அதிகரிக்கும். மேலும், இது ஜீரணிக்க கடினமாக இருக்கும்.
உடலில் கபம் அதிகரிக்கும்போது உங்கள் எடை மேலும் அதிகரிக்கும். இது உங்களை சோம்பேரியாக்கி விடுகிறது. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு, கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை கூட அதிகரிக்கும்.
எனவே நீரிழிவு நோய், உடல் பருமன், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் தயிரை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக, தயிரில் அதிக நீர் சேர்த்து மோர் தயாரித்து எப்போதாவது குடிக்கலாம். என்கிறார் ஆயுர்வேத நிபுணர்.
வெள்ளை உப்பு
வெள்ளை உப்பு குறித்து மருத்துவர் சவலியா கூறுகையில், வெள்ளை உப்பு நேரடியாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுப்பதில்லை.
இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், இது இருதய நோய், பக்கவாதம், சிறுநீரக பிரச்சனை மற்றும் பிற நீரிழிவு நோயால் ஏற்படும் பிரச்சனைகளை அதிகரிக்கும்.
உப்பை கட்டுப்படுத்துவது, கல் உப்பிற்கு மாறுவது அல்லது கட்டுப்படுத்த ஹிமாலயன் இளஞ்சிவப்பு உப்பை பயன்படுத்துவது நிச்சயமாக உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பிற நீரிழிவு சிக்கல்களைத் தடுக்க உதவும் என்கிறார்.
வெல்லம்
வெல்லம் இரசாயனங்கள் இல்லாமல் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால் சர்க்கரையை விட 100% ஆரோக்கியமானது என்பது உண்மைதான்.
சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையை விட வெல்லம் சிறந்த மாற்றாக கருதப்பட்டாலும், அதே அளவில் அதிகமாக உட்கொள்ளுவது நீரிழிவு பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். இது நோயாளியின் ஆரோக்கியத்தை மேலும் பாதிக்கும்.
என்வே நீரிழிவு நோயாளிகள் சக்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்தினால் அதை மிதமான அளவில் எடுத்துக்கொள்வது அவசியம் என்கிறார் மருத்துவர் சவலியா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“