நாம் எப்பொழுதும் பற்பசையை’ பற்களை சுத்தம் செய்ய பயன்படுத்துகிறோம், சிலர் அதை தோல் பராமரிப்புடன் இணைக்கிறார்கள், குறிப்பாக சிவப்பு பரு மீது பேஸ்ட் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறார்கள்.
Advertisment
ஆனால் டூத்பேஸ்ட் வெறும் பற்களை சுத்தம் செய்ய மட்டும்தானா? உங்கள் தினசரி வாழ்க்கையை எளிமையாக்க, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில டூத்பேஸ்ட் ஹேக்ஸ் இங்கே உள்ளன.
சுத்தம் செய்ய
Advertisment
Advertisements
சில நேரங்களில் குழந்தைகள் சுவர்களில் வரைகின்றனர். இது பல குழந்தைகளின் இயல்பாகும். பேனா, க்ரேயான், கலர் பென்சில் என தங்கள் கண்களில் பட்டதை எடுத்து, உடனே சுவர்களில் டூடுல் வரையத் தொடங்குகிறார்கள். இது உங்களுக்கு தொல்லையாக இருக்கலாம். ஆனால், இனி குழந்தைகள் சுவற்றில் வரைவதை தடுக்க வேண்டாம். அவர்கள் வரைந்த பிறகு, அதில் சிறிது டூத்பேஸ்ட் தடவி, ஸ்பாஞ்ச் கொண்டு தேய்த்து எளிதாக உங்கள் சுவரை சுத்தம் செய்யலாம்.
நெயில் பாலிஷ் ரிமூவர்
உங்களிடம் இருந்த நெயில் பாலிஷ் ரிமூவர் பாட்டில் தீர்ந்துவிட்டதா? புது கலர் நெயில் பாலிஷ் போடமுடியவில்லையா? உடனே கொஞ்சம் டூத்பேஸ்ட் சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ரிமூவரை உருவாக்குங்கள். இதை உங்கள் நகங்களில் தடவி, பழைய நெயில் பாலிஷ் நிறங்களை எளிதாக அகற்றலாம்.
சிங்க் சுத்தமாக
உங்கள் குளியலறையை சுத்தம் செய்ய வெவ்வேறு வழிகளைத் தேடுவதற்குப் பதிலாக, சிங்க் பளிச்சென்று சுத்தமாக இருக்க, சிறிது பற்பசையைத் தேய்க்கவும். இது அனைத்து வகையான சோப்பு எச்சங்களையும் அகற்றி, நாற்றங்களை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டதாக நம்பப்படுகிறது.
டேபிள் கிளீனர்
டேபிள் மேற்பரப்பில், வாட்டர் மார்க் மற்றும் காபி கறைகளை பார்த்தாலே பலருக்கு எரிச்சல் வரும். ஆனால், இதை நீக்குவது மிகவும் எளிதானது. சிறிதளவு பேஸ்ட் மற்றும் சிறிது தண்ணீரின் உதவியுடன் இதைச் செய்யலாம். அதை சுத்தமாக துடைக்கவும், நீங்கள் வித்தியாசத்தை கவனிப்பீர்கள்.
கார்பெட் சுத்தம் செய்ய
கம்பளத்தின் மீது ஒயின் அல்லது காபியைக் கொட்டி வீட்டீர்களா? கறை படிந்துவிட்டதா? பீதி அடைய வேண்டாம். வீட்டில் டூத் பேஸ்ட் இருக்கும் வரை கம்பளத்திற்கு ஒன்றும் ஆகாது. சிறிது பேஸ்ட் எடுத்து ஸ்பாஞ்ச் கொண்டு தேய்த்தால் போதும், கறை போய்விடும்.
மை கறை நீங்க
உங்கள் வெள்ளைச் சட்டையில் மை படிந்திருந்தால், அதற்கு விரைவான தீர்வைத் தேடும் போது இது மிகவும் உதவியாக இருக்கும். மை கறையின் மீது சிறிது டூத்பேஸ்ட் தேய்த்து, சட்டையை துவைக்க வேண்டியது தான்.
கண்ணாடி மேற்பரப்பில், குறிப்பாக கைக்கடிகாரங்களில் உள்ள சில கீறல்களை நீங்கள் அகற்ற விரும்பும் போது பற்பசையையும் கருத்தில் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“