நம்ம வீட்டு ஃபிரிட்ஜ்ல எல்லா காய்கறிய வச்சாலும், முருங்கைக்காய் வைக்கிறதுக்கு மட்டும் எப்பவும் இடம் இருக்காது. அதை கட் பண்ணி ஃபிரிட்ஜ்ல வச்சாலும் சீக்கிரமாவே வாடிரும்.
Advertisment
இதுக்கு ஒரு சிம்பிள் தீர்வு இருக்கு.
வாட்டர் பாட்டில்ல வெஜிடபிள் கன்டெய்னர்
Advertisment
Advertisements
நம்ம எப்போவும் வாட்டர், ஜூஸ் பாட்டில் வாங்கி குடிச்சுட்டு அந்த பாட்டில்ல அப்படியே தூரப்போட்டுவோம்.
ஆனா இனி அப்படி பண்ணாதீங்க. உங்ககிட்ட 1 அல்லது 2 லிட்டர் பாட்டில் இருந்தா அதுல இருக்கிற தலைப் பகுதியை சேர்த்து கால் பங்கு வெட்டிருங்க. ஒரு சூப்பரனா வெஜிடபிள் கண்டெய்னர் ரெடி.
இப்போ கீழே வீடியோவுல இருக்கிற மாதிரி, இந்த பாட்டில்ல கட் பண்ண முருங்கைக்காய் போட்டு, வெட்டி வைச்ச தலைப்பகுதி சேர்த்து மூடிருங்க.
இதுல முருங்கைகாய் மட்டும் இல்லாம கேரட், முள்ளங்கி மாதிரி நீளமான காய்கறியும் வச்சுக்கலாம்.
இட்லி தட்டுல முட்டை வச்சு காசு மிச்சம் பண்ணலாம். எப்படி தெரியுமா?
காலையில இட்லி அவிச்சுட்டு அந்த பாத்திரத்தை அப்படியே கழுவ போடுவோம். ஆனா இனி அப்படி செய்யாதீங்க. நீங்க மதியம் சமைக்கிறதுக்கு தேவையான காய்கறி, முட்டைய அதே இட்லிச் சட்டியில ஆவியில வேகவைக்கலாம். இதுனால அதோட சத்துகள் நமக்கு அப்படியே கிடைக்கும். முக்கியமா இதுனால நமக்கு கேஸ் மிச்சம் ஆகும், அதனால காசும் மிச்சம் ஆகும். வேலையும் சீக்கிரம் முடியும்.
அடுத்தமுறை கிச்சன்ல சமைக்கும் போது மறக்காம இந்த குறிப்புகளை டிரை பண்ணி பாருங்க!