Advertisment

எந்த விஷயத்தையும் அதன் இயல்புக்காக பாராட்டுங்கள்

ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு படைப்பும் தனித்தனி குணமுடையவை. இதை நாம் புரிந்துகொள்ளும்போது உறவுகளை கையாள்வது எளிதாகும். நாம் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
life, healthy life, positive life, motivational positive quotes, motivational stories, life positive, life positive thoughts ,life positive quotes, positive thoughts inspirational, life inspirational life thoughts, inspirational life movies ,motivational positive quotes, motivational stories, motivational positive stories, motivational movies, motivational thoughts, for life inspirational thoughts, for life positive life news positive life stories

life, healthy life, positive life, motivational positive quotes, motivational stories, life positive, life positive thoughts ,life positive quotes, positive thoughts inspirational, life inspirational life thoughts, inspirational life movies ,motivational positive quotes, motivational stories, motivational positive stories, motivational movies, motivational thoughts, for life inspirational thoughts, for life positive life news positive life stories

உத்வேகத்தை அளிக்கக்கூடிய இந்த வீடியோவில், டாக்டர் சான்டோக் ஒரு துறவி, தான் தொடர்ந்து கொட்டு வாங்கிய தேளை காக்க முயன்ற கதையை கூறுகிறார்.

Advertisment

இந்த வீடியோவில், வேதங்களை படிக்கும் மாணவர் ஒரு கதையை விவரிக்கிறார். அதில் உறவில் எதிர்பார்ப்புகள் உருவாவது எவ்வளவு முக்கியம் மற்றும் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பில்லாமல் இருப்பதும் தேவை என்பதை குறித்து விளக்குகிறார். யுவர்ஸ் வைஸ்லி என்ற தளம் வெளியிட்டுள்ள வீடியோ பார்ப்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. அதில் ஒரு துறவியின் கதையை விளக்குகிறார்கள். ஆற்றில் விழுந்த தேளை காப்பாற்றும் வீடியோ அது.

அந்த துறவி ஆற்றில் விழுந்த தேளை காப்பாற்ற முயல்கிறார். அந்த தேள் அவரை கொட்டிவிடுகிறது. மீண்டும், மீண்டும் காப்பாற்ற முயல்கிறார், அப்போதெல்லாமும் அந்த தேள் அவரை கொட்டிவிடுகிறது. அப்போது உடனிருந்தவர் துறவியை பார்த்து கேட்கிறார். இந்த நன்றியில்லாத தேளை காப்பாற்ற முயல்கிறீர்களே ஏன் என்று கேட்கிறார். அதற்கு அந்த துறவி, அது அந்த தேளின் தவறில்லை. இயற்கையிலேயே அதற்கு வாய்த்த குணம் அது என்று கூறினார். அருகில் இருந்தவர் மீண்டும் கேட்டார், அது உங்களை கொட்டியபோதும் மீண்டும் மீண்டும் ஏன் காப்பாற்ற முயல்கிறீர்கள் என்று கேட்டார், அதற்கு அந்த துறவி இது எனது குணம் என்று கூறினார்.

நமக்கு இயற்கையாக அமைந்துள்ள குணத்தின் அடிப்படையிலேயே நாம் ஒவ்வொருவரும் இயங்கிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு படைப்பும் தனித்தனி குணமுடையவை. இதை நாம் புரிந்துகொள்ளும்போது உறவுகளை கையாள்வது எளிதாகும். நாம் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு. அவ்வாறு எதிர்பார்க்கும்போது பிரச்னைகளே ஏற்படுகிறது. நமது எதிர்பார்ப்புகளை நாம் சரிசெய்துகொண்டாலே, நாம் மகிழ்ச்சியாக வாழலாம் என்று அந்த வேதங்களை படிக்கும் மாணவர் கூறுகிறார்.

தமிழில்: R. பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment