தினசரி ஒருவர் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டால் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
தினமும் நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது நல்லது. நமது உடல் சீராக இயங்குவதற்கு எல்லா ஊட்டச்சத்துக்களும் கட்டாயம் தேவைப்படுகிறது. 2010-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், மிக குறைந்த அளவு பழங்களை சாப்பிட்டதால் 1.8 மில்லியன் மக்கள் இருதய நோய் காரணமாக இறக்க நேர்ந்திருக்கிறது.
மேலும் காய்கறிகளை உட்கொள்ளும் அளவு குறைந்ததால் ஒரு மில்லியன் மக்கள் இறந்திருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. தென்னாசியா, கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காய்கறிகள் மற்றும் பழங்களின் பயன்பாடு மிகவும் குறைவாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆகையால் இந்த நாடுகளில் இறப்பின் விகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வின்படி, பழங்கள் நிறைய சாப்பிடுவதால் அதிலிருந்து உடலுக்கு வைட்டமின் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடுகின்றன.
இதன் காரணமாக, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை உட்கொள்வது குறையும். பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
குறிப்பாக தினசரி பழங்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்கள் இதய நோயில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.