ஒருவர் தனக்குப் பிடித்தவர்களுக்கு ‘ஸ்வீட் ட்ரீம்ஸ்' என்று மெஸேஜ் செய்துவிட்டு படுப்பது வழக்கம். அதிகமானோர் இரவு துாங்கச் செல்லும் முன் அதைத்தான் செய்கிறார்கள்.
அப்படி உறங்கும் பலருக்கு கனவுகள் வருவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால், அப்படி வரும் கனவுகளை சிலரால் நினைவு படுத்த முடியாமல் போகின்றது. கனவு வந்தது என்பதை அவர்களால் உணர முடியும். ஆனால், என்ன கனவு என்பதை நியாபகப்படுத்த முடியாது.
அது ஏன் எனத் தெரியுமா?
உறங்கும்போது, நமது மூளை 4 வித பரிமாற்றங்களை அடையும். இந்த 4-வது கட்டத்தில்தான் கனவு ஏற்படும். அதில் ஆர்.ஈ.எம் (ராபிட் ஐ மூவ்மென்ட்). என்பது இறுதி பரிமாற்றம். ஆர்.ஈ.எம் கட்டத்தின்போது, கண்கள் படபடவென அடித்துக்கொள்ளும். இதயத் துடிப்பு குறைவாகும். அப்போது, நமது உடல் ‘அடோனியா' என்ற இயங்கா நிலையை அடையும் நேரத்தில், மூளையில் இரண்டு வித ரசாயனங்கள் சுரக்கும்.
அசிடில்கோலின் என்கிற ரசாயனம்தான் நாம் எப்படிப்பட்ட கனவை காண்போம் என்பதை தீர்மானிக்கும். இது அதேபோல நோரிபைன்ஃப்ரைன் என்கிற ரசாயனம் நமது இயக்கம் குறித்து நினைவூட்டும். அது மூளையின் செயல்பாட்டைக் குறைக்கும். நோரிபைன்ஃப்ரைன் ரசாயனம் குறைவாக சுரப்பதன் மூலம் கனவுகளில் நமக்கு உண்டாகும் அழுத்தம் குறையும்.
அதனால், கனவை நியாபகப்படுத்தும் ஆற்றலும் குறையும்.
மேலும் மனிதர்கள் வேகமாக உறங்கிவிட்டாலும், திடீரென விழித்துக் கொண்டாலும் இந்த இரு ரசாயனங்களின் சுரத்தல் சீரின்றி இருக்கும். இதனால், துாக்கத்தில் கண்ட கனவுகள் மறந்துபோய்விடும். சில நேரத்தில் கனவுகள் ஊக்கம் அளிக்கும் விதத்தில் இல்லாமல் இருப்பதும் அதை மறப்பதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.