நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதை பற்றி சிலகாலமாக நாம் பேசி வந்தாலும் பெருந்தொற்று காலங்களில் அதன் அவசியம் நமக்கு புரிகிறது. இருப்பினும், ஒன்றிரண்டு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் உணவுகளை ஒருவரின் உணவில் சில நாட்கள் சேர்ப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியாது. உடலின் தேவைக்கேற்பவும், மாறி வரும் பருவநிலைக்கேற்பவும், ஒரு குறிபிட்ட கால அளவில் வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலமே இது சாத்தியப்படும்.
உடலில் ஒரு வலுவான நோய் சக்தி இருப்பது அவசியம், ஏனெனில் இது நோய்களை எதிர்த்து போராட உதவுவது மட்டுமின்றி அவற்றை விலக்கி வைக்கவும் உதவுகிறது.
இந்திய புரோபயாடிக் பானமான சிவப்புக் கஞ்சி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதற்கான ரெசிபியை ஊட்டச்சத்து நிபுணர், உணவியல் நிபுணர் மற்றும் வாழ்க்கைமுறை பயிற்சியாளர் லாவ்லீன் கவுர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அதில், ’ஒரு தொற்றுநோயைத் தொடர்ந்து ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்துக் கொள்வதற்கு பதிலாக, காலப்போக்கில் வாழ்க்கை முறையில் எளிய மாற்றங்களை செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது நல்லது’ என்றும் கூறியுள்ளார்.
தண்ணீர், கேரட், பீட்ரூட், கடுகு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் கஞ்சியை ஒவ்வொரு நாளும் குறைந்த அளவு எடுத்துக்கொள்வது நல்லது என்றும், காரமான மற்றும் புளிப்பு சுவையுடைய கஞ்சியை ஃபிரிட்ஜில் இரண்டு நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என்றும் பரிந்துரைக்கிறார்.
சிவப்புக்கஞ்சி செய்வது எப்படி?
பீட்ரூட் ½ கிலோ (வினிகர் கொண்டு கழுவிய பின் நறுக்கி கொள்ளவும்), கேரட் ½ கிலோ, தண்ணீர் 8 கப், கடுகு 1 ½ டீஸ்பூன், உப்பு 1 ½ டீஸ்பூன், ப்ளாக் சால்ட் 1 ½ டீஸ்பூன் , பெருங்காயம் ஒரு சிட்டிகை மற்றும் மிளகாய் தூள் 1/4 டீஸ்பூன் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு, தண்ணீரை கொதிக்க வைத்து ஆறவைக்கவும், அதில் அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கவும், இதனை காற்று புகா பாத்திரத்தில் அடைத்து இரண்டு நாட்கள் சூரிய ஒளியில் வைக்கவும்.
இந்தக் கஞ்சியை ஒருநாளைக்கு 100 ml முதல் 150 ml வரை பெரியவர்கள் எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகள் புளிப்பு சுவையை விரும்பாததால் 1-2 ஸ்பூன் தரலாம். கஞ்சி தொண்டை புண்ணை ஏற்படுத்தும் வாய்பிருப்பதால் குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil