எலுமிச்சையின் பல நன்மைகள் நம்மை ஆரோக்கியத்தின் இளஞ்சிவப்பு குறியீட்டில் வைத்திருக்கின்றன. முடி முதல் தோல் வரை எடை முதல் செரிமான ஆரோக்கியம் வரை எலுமிச்சை நமக்கு பல நன்மைகளை செய்கின்றன. ஆனால் பழத்தின் கூழ் முழுமையாகப் பயன்படுத்தப்படும்போது, பழத்தின் தோல் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படும். ஆனால், தோல் பல சுவாரஸ்யமான நன்மைகளை கொண்டுள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? வாருங்கள் எலுமிச்சை தோலில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று பார்ப்போம்.
ஊட்டச்சத்து மதிப்பு
எலுமிச்சை தோல் அதிக ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளது. தோலில், கார்போஹைட்ரேட், ஃபைபர், புரதம், கொழுப்பு மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றில் நிறைந்துள்ளது. கூடுதலாக, இது சிறிய அளவு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றை வழங்குகிறது. எனவே, தோலை பயன்படுத்த ஆரம்பிக்க இதைவிட சிறந்த காரணம் வேறு எதுவும் வேண்டுமா?.
வாய் ஆரோக்கியம்
ஈறு நோய்த்தொற்றுகள், பல் குழிகள் மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் பிற வாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு எதிராக போராட எலுமிச்சைத் தோல் உதவுகிறது என்பதால், தோல், வாய்க்கும் நல்லது என்று நம்பப்படுகிறது. நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை நிறுத்தக்கூடிய பாக்டீரியா எதிர்ப்பு பொருட்கள் இந்த தோலில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உண்மையில், கடந்த காலத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, எலுமிச்சை தோலில் நான்கு சேர்மங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர், அவை பல பொதுவான நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்களை திறம்பட எதிர்த்துப் போராடும்.
ஆக்ஸிஜனேற்றிகள்
எலுமிச்சை தோலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது, இது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய முழுமை பெறாத வேதிப் பொருட்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. உண்மையில், சில ஆய்வுகள் எலுமிச்சை தோல்கள் திராட்சைப்பழம் அல்லது டேன்ஜரின்(ஆரஞ்ச்) தோல்களை விட வலுவான ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டைக் கொண்டுள்ளன என்று கூறுகின்றன. ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், தோல்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இதய ஆரோக்கியம்
எலுமிச்சை தோலில் உள்ள முக்கிய நார்ச்சத்துகளான, ஃபிளாவனாய்டுகள், வைட்டமின் சி மற்றும் பெக்டின் போன்ற சேர்மங்கள், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சினைகளை விலக்கி வைக்கிறது. பெக்டின் பித்த அமிலங்களின் வெளியேற்றத்தை அதிகரிப்பதன் மூலம் கொழுப்பின் அளவைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்
ஃபிளாவனாய்டுகள் பல வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது, குறிப்பாக வயிற்று புற்றுநோய். ஒரு ஆய்வில் தேநீருடன் உட்கொள்ளும்போது, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்தி தோல்களுக்கு உண்டு என்று கண்டறியப்பட்டது. தோலில் உள்ள வைட்டமின் சி இரத்த வெள்ளை அணுக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. எலுமிச்சை தோலின் நன்மைகளைப் பற்றி ஆராய்ச்சி இன்னும் தேவைப்பட்டாலும், அதனை உட்கொள்வது நமக்கு தீங்கு விளைவிக்காது.
இதை உணவில் எப்படி சேர்ப்பது?
இது கடினம் அல்ல. நீங்கள் எலுமிச்சைத் தோலை பழத்துண்டுகள்(சாலட்) மற்றும் யோகூர்ட்களில் சேர்த்து உட்கொள்ளலாம். அல்லது, நீங்கள் அவற்றை நன்றாக காயவைத்து பொடி செய்து, சூப்கள் மற்றும் பானங்களின் மேல் தெளித்து பருகலாம். மேலும், குளிர்ந்த காலையில் ஒரு கப் சூடான தேநீரில் புதிய தோல்களைச் சேர்த்து சுவைக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.