இதய நோய்கள், மெட்டபாலிக் சிண்ட்ரோம், குடல் அல்லது சிறுநீரக பை புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவை பால் பொருட்களை தொடர்ச்சியாக சாப்பிடுவதால் தடுக்கப்படுகிறது என்று ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
கர்ப்ப காலத்தில், கர்ப்பிணிகள் தினமும் குறிப்பிட்ட அளவு பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்து கொள்வதால் குழந்தையின் எடை, உயரம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் ஆகியவை சிறப்பாக இருக்கும் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
உடல் பலவீனம் மற்றும் எலும்புகளில் தொய்வு போன்றவை ஏற்படாமல் தடுக்க, வயது முதிர்ந்தவர்கள் தினமும் பால் மற்றும் பால் பொருட்களை சீரான அளவில் எடுத்து கொள்வது நல்லது என்றும் ஆய்வு தெரிவிக்கின்றது.
மேலும் உடல் வளர்ச்சி, எலும்புகளின் அடர்த்தி, தசைகளின் வளர்ச்சி ஆகியவை சிறப்பாக இருக்கும். கர்ப்ப காலம் மற்றும் பால் சுரப்பு ஆகியவற்றிற்கு பாலில் இருக்கக்கூடிய சத்துக்கள் மிகவும் அவசியமானது.
புரதம், கால்சியம், மக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், சிங்க், செலினியம், வைட்டமின் ஏ, ரிபோஃப்ளேவின், வைட்டமின் பி12 மற்றும் பெண்டோதெனிக் அமிலம் ஆகிய சத்துக்கள் பாலில் இருப்பதால் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.
பால் பொருட்கள் மற்றும் பாலை முற்றிலுமாக தவிர்ப்பவர்களுக்கு எலும்பு மற்றும் இதய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.