தென்கிழக்கு லண்டனில் உள்ள பிரிட்டனின் ஓர்பிங்டனைச் சேர்ந்த 108 வயதான மேரி ஆன் கிளிஃப்டன், அனைவருக்கும் சில நட்பு ஆலோசனைகளை வழங்குகிறார்.
ரோசினா என்று அழைக்கப்படும் மூதாட்டியின் கூற்றுப்படி, நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கையின் ரகசியம், மதிய உணவு நேரத்தில் கொஞ்சம் ஆல்கஹால் சாப்பிடுவது தான். இது எனக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. கடினமாக உழைக்க வேண்டும், ஆனால் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சிறிதளவு கடின உழைப்பு உங்களை காயப்படுத்தாது, என்றார்.
மார்ச் 16, 1915 இல், தெற்கு லண்டனில் உள்ள லாம்பெத்தில் பிறந்த கிளிஃப்டன், பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ஆடை வெட்டும் தொழிலாளியாக பணிபுரிந்தார். பின்னர் அவர் தனது மகளின் அச்சுத் தொழிலில் சேர்ந்தார்.
ரோசினா தனது மறைந்த கணவர் எர்னியை தனது 12வது வயதில் பள்ளியில் சந்தித்தார். இந்த ஜோடிக்கு பமீலா மற்றும் பெர்னி என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். இன்று, ரோசினாவுக்கு நான்கு பேரக்குழந்தைகள், 10 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் ஏழு எள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர்.
இங்கிலாந்தின் ஃபாக்ஸ்பிரிட்ஜ் ஹவுஸ் கேர் டீம், தனது வாழ்க்கையை கொண்டாட ஏற்பாடு செய்த ஒரு ஆச்சரியமான தேநீர் விருந்தில் பெரிய பாட்டி இந்த உதவிக்குறிப்பை வழங்கினார். அங்கு ப்ரோம்லி நகரின் மேயரும் இருந்தார். இந்த சிறப்பு நாளில், அவளுக்கு ராஜாவிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்தும் வந்தது.
ஃபாக்ஸ்பிரிட்ஜ் ஹவுஸின் வீட்டு மேலாளர் ஸ்டெல்லா பார்ன்ஸ், கிளிஃப்டன், அனைவருக்கும் மிகவும் பிடித்த, பிரபலமான குடியிருப்பாளர் என்று கூறினார்.
1920 களில் இருந்து 1940 வரை சிங்கலாங் இசையுடன் ராஜாவின் பிறந்தநாள் செய்தி, ஜாம் மற்றும் க்ரீமுடன் பிரெட் என ஆச்சரிய விருந்தை திட்டமிட ஊழியர்கள் விரைவாக பணியாற்றினர் என்று பார்ன்ஸ் கூறினார்.
நூற்றாண்டு நிறைவு பெற்ற ஒருவர் சில வாழ்க்கை ஆலோசனைகளை பகிர்ந்து கொள்வது இது முதல் முறை அல்ல.
சமீபத்தில், கலிபோர்னியாவில் உள்ள கேமரில்லோவில் வசிக்கும் 103 வயதான தெரேசா, வாழ்க்கையில் எதையும் சாதிக்க, மன உறுதி எப்படி உதவும் என்பதைக் காட்டினார்.
ஃபாக்ஸ் 11 லாஸ் ஏஞ்சல்ஸ் அறிக்கையின்படி தெரேசா தனது உள்ளூர் உடற்பயிற்சி மையத்திற்கு வாரத்தில் குறைந்தது மூன்று முதல் நான்கு முறை – முழு மேக்கப் மற்றும் நகைகளுடன் வருகிறார். அவரது மகள், ஷீலா மூர், ஜிம்மை தனது அம்மாவின் ‘மகிழ்ச்சியான இடம்’ என்கிறார்.
இத்தாலியில் பிறந்த தெரசா, 1946 இல் தனது மறைந்த கணவரை மணந்தார். அவர் இத்தாலியை விட்டு வெளியேறியபோது, அவர் ஒரு நாடோடி வாழ்க்கையை வாழ்ந்தார், மேலும் ஆர்வமே ஒரு பெரிய ஊக்கமளிக்கும் காரணியாக நான் நினைக்கிறேன், என்று ஷீலா கூறினார்.
நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று தெரசா கூறினார், “மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். நல்ல விஷயங்களைப் பற்றி சிந்திக்க முயற்சி செய்யுங்கள் – எல்லாம் அழகாக இருக்கிறது என்று நினைக்கவும், அழகான விஷயங்களை சிந்திக்க வேண்டும் என்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“