இட்லி தென்னிந்தியாவில் சமையலறைகளில் இருந்து வந்த சிறந்த உணவுகளில் ஒன்றாகும். இது சத்தான காலை உணவாகும். சூடான சாம்பார் மற்றும் குளிர்ந்த தேங்காய் சட்னியுடன் சூடான மற்றும் மென்மையான இட்லிகளின் ஒரு தட்டை ஒரு இந்தியர் திருப்பிவிடுவதை நீங்கள் காண முடியாது. இட்லியானது உலகிற்கு இந்திய சமையல் அளித்த மிகச் சிறந்த பங்களிப்பாகும். இட்லி மாவு என்பது ஊறவைத்த மற்றும் அரிசி மற்றும் உளுந்தின் எளிய கலவையாகும். இது நன்கு நொதிக்க வைக்கப்படுகிறது. பின்னர் மாவானது ஆவியில் வேகவைக்கப்பட்டு சாம்பார் மற்றும் சட்னியுடன் பரிமாறப்படுகிறது.
இட்லிகளின் அமைப்பு, நிறம், பஞ்சு போன்ற தன்மை, அதை எல்லோராலும் விரும்பச் செய்கின்றன. இட்லி நீராவியில் இருக்கும்போது மட்டுமல்ல அறை வெப்பநிலையில் இருக்கும்போதும் மென்மையாக இருக்க வேண்டும். நீங்கள் செய்த இட்லி இந்த மென்மையை அடைய முடிந்தால் நீங்கள் இட்லியை சரியாக செய்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு கீழ்காணும் செயல் முறைகள் மிக அவசியமாகும்.
அரிசி
பஞ்சுபோன்ற இட்லியைப்பெற அரிசி மிக முக்கியம். இட்லிக்கு புழுங்கல் அரிசியே சிறந்தது. ஆறிய பிறகும் மென்மையாக இருக்கும் பஞ்சு போன்ற இட்லிகளைப் பெற விரும்பினால் நீண்ட தானிய அரிசியை பயன்படுத்துவது பொதுவாக பரிந்துரைக்கப்படுவதில்லை. இட்லி அரிசி என்று கடைகளில் கிடைக்கும் அரிசியையும் பயன்படுத்தலாம். அதுவும் ஒருவகை புழுங்கல் அரிசியே.
உளுந்து
இட்லியைப் பொறுத்தவரை பெரும்பாலும் முழு அல்லது பிளவுபட்ட கருப்பு உளுந்து பயன்படுத்தப்படுகிறது.. ஏனெனில் இது அதிக சத்தானதாகும். அரிசி மற்றும் உளுந்து பொதுவாக இட்லி மாவுக்கு 2:1 என்ற விகிதத்தில் பயன்படுத்தப்படுகிறது.
ஊறவைத்தல்
சிலர் அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக ஊறவைக்கிறார்கள், ஆனால் இரண்டையும் தனித்தனியாக ஊற வைப்பது நல்லது. ஏனென்றால் அரிசி மற்றும் உளுந்து ஊற வெவ்வேறு அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. உளுந்துக்கு பொதுவாக அதிக தண்ணீர் தேவை.
அரைத்தல்
அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக அரைக்க வேண்டும். இட்லி மாவு அரைக்க மிக்சி,கிரைண்டர் அல்லது ஆட்டுக்கல் போன்றவற்றை பயன்படுத்தலாம். இருப்பினும் இவற்றில் ஆட்டுக்கல்லே சிறந்தது. ஏனெனில் அவற்றின் ஈரமான சாணைக் கற்கள் மாவை நன்றாக அரைக்க உதவும்.
வெந்தய ரகசியம்
இட்லியின் சுவைக்கு அதில் சேர்க்கும் வெந்தயம் மிக முக்கிய காரணம். வெந்தயத்தை நன்கு ஊறவைத்து அரிசியுடன் சேர்க்கும்போது நல்ல சுவையைத் தரும். மேலும் இட்லிக்கு மென்மையையும் தரும். வெந்தயத்தின் சுவை சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதனால் விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil