இந்தியாவில் மார்ச் மாதம் தொடங்கினாலே வெயில் அதிகமாக இருக்கும். அதுவும் கோடைக்காலத்தில் வெயில் சுட்டெரிக்கும். இதில் நமது சருமம் சீக்கிரமே வறண்டு போகும். கோடையில் வறண்ட சருமத்தின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் அது உலர்ந்தாக மட்டுமே இருக்கும். இதற்கு முக்கிய காரணம் ஏர் கண்டிஷனரில் அதிக நேரம் செலவழிப்பதாகும். ஆனால் அதைவிட மிக முக்கியமான ஒன்று போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்பதாகும். எனவே தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது சருமத்தை தளர்த்துவதோடு மட்டுமல்லாமல் அதை ஈரப்பதாமாக்கவும் உதவும்.
மேலும் நம் வீட்டிலுள்ள சில பொருட்களைக் கொண்டே இச்சரும பிரச்சனைக்கு எளிய தீர்வு காணலாம். இதற்குத் தேவையான பொருட்கள் பற்றி தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
ஆம். முதல் நாள் இரவு மீதமுள்ள சப்பாத்தியைக் கொண்டு சரும பிரச்சனைகளை தீர்க்கலாம். எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
மீதமுள்ள சப்பாத்தியை நன்றாக தூளாக அரைத்து, ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் மலாய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். இதனை உங்கள் சருமத்தில் தடவி 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உடனடியாக நீங்கள் தினமும் பயன்படுத்தும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.
இதில் உள்ள, மஞ்சள், ஆண்டி-பாக்டீரியா பண்புகளைக் கொண்டது. இது உங்கள் சரும துளைகளிலிருந்து வரும் அழுக்குகளை நீக்க உதவுகிறது. ரோஸ் வாட்டர் சருமத்தை பளபளப்பாக்குகிறது. சப்பாத்தி தூள் சரும வறட்சி நீக்கியாக செயல்படுகிறது. இந்த சரும பராமரிப்பு செயல்முறைகளை வீட்டிலிருந்து செய்வது நல்லது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil