இந்த கொரோனா காலக்கட்டத்தில் பல மாதங்களாக வீட்டிலேயே முடங்கியிருக்கும் பெரும்பாலான மக்கள், வெளியில் கிடைக்கும் உணவுக்கு ஏங்கத் தொடங்கியிருக்கிறார்கள், அதிலும் குறிப்பாக குப்பை உணவுகள் என்று சொல்லப்படகூடிய ஜங் புட்ஸ். ஆனால் நீங்கள் என்னதான் டயட் இருந்தாலும், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் குப்பை உணவுகளை எடுத்துக் கொள்வது ஒருபோதும் நல்லதல்ல. இந்த ஆரோக்கியமற்ற ஆசைகளை அடக்கி, உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க ஒரு வழி இருக்கிறது. இதற்கு நீங்கள் ஒரு எளிய உணவுப் பொருளை மட்டுமே சாப்பிட வேண்டும். அது வேறெதுவும் இல்லை உலர்திராட்சை தான்.
வல்லுநர்கள் கூறுகையில், உலர்திராட்சைக்கு நம் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஏக்கங்களை அடக்கும் சக்தி உள்ளது. நாம் எதையாவது ஏங்கத் தொடங்கும் போது, அதை அடிக்கடி நினைக்கும்போது, நம் கவனத்தை ஈர்ப்பது கார்போஹைட்ரேட் உணவுகள் தான். உலர்திராட்சை எடை இழப்புக்கு உதவுகிறது. இதனை உட்கொள்வதை ஒரு பயிற்சியாக செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உலர்திராட்சையும் சம்பந்தப்பட்ட இந்த எடை இழப்புக்கான சூட்சமம் எளிது. உங்கள் எடையை அதிகரிக்கும் மற்றும் ஆரோக்கியமற்றதாக உணரக்கூடிய ஒன்றைப் பற்றி நீங்கள் ஏங்கும்போதெல்லாம், ஒரு சில திராட்சையை எடுத்து மிக மெதுவாக சாப்பிடுங்கள். நீங்கள் மெதுவாக சாப்பிடுவதால் இப்போது சாப்பிடுவதையே நினைவில் வைத்திருப்பீர்கள். எனவே இது உங்கள் மனதையும் உடலையும் மெதுவாகச் செயல்படச் செய்து செயல்முறையைப் புரிந்துகொள்ளச் செய்கிறது. அதற்கு ஐந்து நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவாகவே ஆகும்.
உலர்திராட்சை சாப்பிடுவது ஆரோக்கியமான சிற்றுண்டியின் ஒரு பகுதியாகும், எனவெ இது எப்போதும் ஊக்குவிக்கப்படுகிறது. நீங்கள் உலர்திராட்சை சாப்பிடும்போது, உடலில் ஒரு ரசாயன மாற்றம் தொடங்குகிறது, இது உங்கள் சுவாசத்தை குறைக்கிறது. மேலும், உலர்திராட்சை உங்கள் பசியை சீராக வைத்திருப்பதாகவும், உங்கள் உடனடி பசிகளைக் கவனித்துக்கொள்வதாகவும், செரிமான செயல்முறையை மெதுவாக்குவதாகவும், மன அழுத்தத்தின் அளவைக் குறைப்பதாகவும் நம்பப்படுகிறது, இது சில நேரங்களில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் உணவு நுகர்வுக்கு தூண்டுதலாக இருக்கலாம்.
இந்த பயிற்சியை காலையில் அல்லது பகலில் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். மூளையானது உடலை எதையாவது சாப்பிடச் சொல்லும் சமிக்ஞைகளை அனுப்புகிறது. முன்பு குறிப்பிட்டபடி, உலர்திராட்சை ஆரோக்கியமான சிற்றுண்டியின் ஒரு பகுதியாகும். நீங்கள் உலர்திராட்சையை சாப்பிடும்போது, உங்கள் உடல் எவ்வாறு செயல்படுகிறது, அது என்ன உணர்கிறது போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள், அதன் தேவைகளை நன்கு புரிந்துகொள்ளங்கள். நீங்கள் கார்ப்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, பொதுவாக நீங்கள் எவ்வாறு நடந்துகொள்வீர்கள் என்பதற்கு இது நேர்மாறானது.
உலர்திராட்சைகளில் வைட்டமின்கள், இயற்கை சர்க்கரைகள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம், உடலுக்குத் தேவையில்லாத எதையும் உண்ணாமல் வைத்து இருக்க உதவுகிறது, இதனால் இறுதியில் உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். பாதாம் கூட பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. உலர்திராட்சையை சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது நல்லது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.