இட்லி, தோசைக்கேற்ற சுவையான இஞ்சி சட்னி; இப்படி செஞ்சு பாருங்க!
Lifestyle news in tamil ginger chutney tips, how to make ginger chutney: இஞ்சியை சுவையான சட்னியாக செய்து கொடுத்தால், எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். இப்போது, அந்த சுவையான இஞ்சி சட்னியை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
Lifestyle news in tamil ginger chutney tips, how to make ginger chutney: இஞ்சியை சுவையான சட்னியாக செய்து கொடுத்தால், எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். இப்போது, அந்த சுவையான இஞ்சி சட்னியை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
நம்முடைய பெரும்பாலான அசைவ உணவுகளில் கட்டாயம் இஞ்சி இடம்பெறும். அசைவ உணவு சாப்பிடுவதால் ஏற்படும் செரிமான பிரச்சனைகளை சரி செய்ய அந்த உணவுகளில் இஞ்சி சேர்க்கப்படுகிறது. மேலும், ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு வருவதை இஞ்சி தடுக்கிறது. தலைவலியைப் போக்கி ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. உடலிலுள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்க உதவுகிறது. மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இதயத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
Advertisment
ஆனால் இத்தகைய இஞ்சியை உணவிலிருந்து பெரும்பாலோனர் ஒதுக்கித் தள்ளுவர். இஞ்சி காரமாக இருப்பதால் நேரடியாக சாப்பிடுவதை எல்லோரும் விரும்பமாட்டார்கள். ஆனால் அதே இஞ்சியை சுவையான சட்னியாக செய்து கொடுத்தால், எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். இப்போது, அந்த சுவையான இஞ்சி சட்னியை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இஞ்சி – 1/2 கப்
Advertisment
Advertisements
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 5
கடுகு – சிறிதளவு
பூண்டு – சிறிதளவு
தக்காளி – 1 பழம்
கறிவேப்பிலை – சிறிதளவு அளவு
புளி – ஒரு கோலி அளவு
பெருங்காயம் - சிறிதளவு
வெல்லம் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு (நல்லெண்ணெய் சிறந்தது)
உப்பு – தேவைக்கு ஏற்ப
இஞ்சி சட்னி செய்முறை
முதலில் இஞ்சியை நன்றாக கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு பக்கம் ஒரு சிறிய பாத்திரத்தில் புளியை சிறிது தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக் கொள்ளவும். இப்போது, வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கி, அதை தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதே வாணலியில் கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை, பெருங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். ஊறவைத்த புளியை சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வதக்கிய அனைத்து பொருட்களுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து அதனுடன் புளிக் கரைசலையும் சேர்த்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும். இப்போது சுவையான இஞ்சி சட்னி ரெடி. இந்த இஞ்சி சட்னி, இட்லி, தோசை, அடைக்கு மட்டுமல்ல… சாதத்திற்கும் இது சூப்பராக இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil