இஞ்சி தேன்… இஞ்சி ஜாம்… இஞ்சி ஸ்மூத்தி… காலையில் சாப்பிட இதைவிட பெஸ்ட் எது?

healthy tips in tamil news: உங்கள் நாளை இஞ்சியில் தயார் செய்யப்பட்ட இந்த ஹெல்தி ட்ரிங்குடன் தொடங்குங்கள். 

Lifestyle news in tamil Give your day a healthy start with ginger

Lifestyle news in tamil: ஞ்சி உடலுக்கு ஊக்கமளிக்கு ஒரு சிறந்த மூலிகை ஆகும். இது நம்முடைய அன்றாட சமையல்களில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாகவும் உள்ளது. நீங்கள் தேநீர் விரும்பியாக இருந்தால் நிச்சயம் இஞ்சி டீ அருந்தி இருப்பீர்கள். அதுவும் குளிர் காலத்தில் இஞ்சி டீ குடிக்க அவ்வளவு நன்றாக இருக்கும். இஞ்சி டீ அருந்துவதன் மூலம் எடை இழப்பு முதல் மாதவிடாய் பிடிப்பு மற்றும் மேம்பட்ட செரிமானம் வரை உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க வல்லது. இஞ்சியுடன் சிறிதளவு லெமன் கலந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் குடல் சம்பந்தமான எந்த பிரச்னைகளும் எழாது. இன்ஜின் மற்ற நன்மைகளைப் பற்றி கீழே விரிவாக காணலாம்.

இஞ்சி காபி

இஞ்சி காபி ​​ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றி. இதன் காரமான சுவை குடலின் செரிமானத்திற்கு நன்றாக உதவும்.

இஞ்சி ஜாம்

இஞ்சி ஜாம், பழங்களில் செய்யப்படும் ஜாம் வகைகைகளை அறிந்திருப்போம். ஆனால் இது என்ன புதிய ஒன்று என்று குழம்ப வேண்டாம். இஞ்சி ஜாமை நீங்கள் வீட்டிலேயே கற்றுக் கொள்ளலாம். அல்லது கடைகளுக்குச் சென்றும் வாங்கிக் கொள்ளலாம். இந்த இஞ்சி ஜாமை பிரட்டுகளுடனும், பிஸ்கட்டுகளுடனும் சேர்த்து சிற்றுண்டியாக உண்ணலாம். இது உடலுக்கு நல்ல வலு தரும். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

இஞ்சி ஸ்முதி 

நீங்கள் தினமும் அருந்தும் ஸ்முதியுடன் இஞ்சியையும் சேர்த்து அருந்தலாம். இது உங்கள் உடலில் ஆரோக்கியத்தை அதிகரிப்பதோடு  

உங்கள் குடலுக்கு சிறந்த மருந்தாகவும் இருக்கும். அதோடு உடலில் உள்ள பாக்டீரியாவை எதிர்த்தும் போராடும்.

இஞ்சி கிரானோலா 

கிரானோலாவை ஒரு ஆரோக்கியமான காலை உணவாக தெரிவு செய்யலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து நிறைந்து காணாப்படுகின்றது. அதில் சிறிதளவு இஞ்சியைச் சேர்ப்பதன் மூலம், இந்த கலவையை காரமாகவும் சிறப்பாகவும் செய்யலாம். காலை உணவை ஆரோக்கியமாக மாற்ற நீங்கள் சிறிது தேனையும் சேர்க்கலாம். இந்த குறிப்பிட்ட காலை உணவு பல சத்தான நன்மைகளைக் கொண்டுள்ளது. அதோடு இதில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காணப்படுகின்றது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Lifestyle news in tamil give your day a healthy start with ginger

Next Story
அம்மாவை பெருமைப்பட வைத்த பூவையார்… சூப்பர் சிங்கர் மேடை டூ மாஸ்டர் எப்படி சாத்தியம்?super singer poovaiyar age poovaiyar house
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com