வீட்டுத் தோட்டம் நீர்ப் பாசனத்திற்கு அரசு மானியம்: 60 செடிகளுக்கு ஒரே நேரத்தில் நீர் பாய்ச்சலாம்

home garden and terrace garden tamilnadu govt scheme: வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கான திட்டம் பெருநகரங்களில் ஏற்கனேவே செயலப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. 

Lifestyle news in tamil home garden and terrace garden tamilnadu govt scheme
Lifestyle news in tamil home garden and terrace garden tamilnadu govt scheme

Lifestyle news in tamil:  நகரங்களில் வசிப்பவர்கள் மாடித் தோட்டம் அமைக்க ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசின் தோட்டக்கலை துறை மானிய விலையில் விதைகளும், உபகாரணங்களும் வழங்கி வருகிறது. அதன்படி தற்போது வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கும், அதற்கு  நுண்ணீர் பாசன கட்டமைப்புகளை வழங்குவதற்கும் புதிய திட்டத்தை துவங்கி உள்ளது. இந்த வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கான திட்டம் பெருநகரங்களில் ஏற்கனேவே செயலப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. 

தோட்டக்கலை துறை வழங்கும் இந்த திட்டத்தின் கீழ், வீட்டுத்தோட்டம் அமைக்க தேவையான பாலிதீன் பைகள், தென்னை நார் கழிவுகள், காய்கறி விதைகள், கீரை விதைகள், மற்றும் அவற்றுக்கு தேவையான நுண்ணுாட்ட சத்துக்கள் போன்றவற்றை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மானிய விலை போக ரூபாய் 500 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். 

நாம் அமைக்கும் வீட்டுத் தோட்டத்திற்கு அதிக தண்ணீர் தேவைப்படும். அது மட்டுமல்லாமல் தண்ணீரை தோட்டத்திற்கு திறந்து விட்டுவிட்டு குழாயை அடைக்க மறந்து விடுவோம். நாம் பயன்படுத்தும் தண்ணீரை சிக்கனம் செய்யும் வகையிலும், தோட்டத்தில் வளர்க்கும் செடி, கொடிகளின் சாகுபடியை அதிகரிக்க செய்யும் வகையிலும், அவைக்கு நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் தேவைப்படும். இவையனைத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ள தமிழக அரசின் தோட்டக்கலை துறை மானிய விலையில் நுண்ணீர் பாசன கட்டமைப்புகளுக்கு தேவையான   பைப்புகள், மற்றும் அவைகளோடு சேர்த்து 13 வகை பொருட்களையும் வழங்குகிறது. இதற்கு மானிய விலை போக ரூபாய் 700 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நுண்ணீர் பாசன கட்டமைப்பைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் 60 செடி, கொடிகளுக்கு நீர் பாசன வசதி செய்து கொள்ளலாம். அதோடு செடிகள் நன்றாக வளர  நுண்ணுாட்ட சத்துக்களையும் வழங்க முடியும். 

தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா, கோபாலபுரம் செங்காந்தள் பூங்கா, மாதவரம் தோட்டக்கலை செயல் விளக்க பூங்கா, அண்ணா நகர் தோட்டக்கலை மூலிகை பண்ணை, வண்ணாரப்பேட்டை தோட்டக்கலை பாரம்பரிய பூங்கா போன்ற இடங்களில் தமிழக அரசின் தோட்டக்கலை சார்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த திட்டத்தை பயன்படுத்தி உங்களது வீட்டிலும் தோட்டம் அமைத்து, இயற்கையான மற்றும் சத்தான காய்கறிகளை பறித்து சமைக்கலாம்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Lifestyle news in tamil home garden and terrace garden tamilnadu govt scheme

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express