Lifestyle news in Tamil: வார இறுதி நாள் முடிந்து, வாரத்தின் முதல் நாள் காலை தொடங்கும் போதே ஒரு வித சோம்பலுடனே நாம் காணப்படுகின்றோம். படுக்கையை விட்டு எழுவதற்கே மனம் வருவதில்லை, இதில் எப்படி காலை உணவு தயாரிப்பது என்று நம்மில் பலர் எண்ணுவோம். அதோடு காலை உணவு உண்ண நேரம் இல்லாமல் அலுவலகம் சென்றும் விடுவோம். காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு நல்லது அல்ல என்று முன்னோர் கூறுவர். எனவே இந்த வாரத்தை சுறுசுறுப்பாக துவங்குவதற்கும், சுவையான காலை உணவை எளிதாக தயார் செய்யவும் சமையல் வல்லுநர் மேக்னா காம்தாரின் ஓர் எளிய செய்முறையை இங்கே வழங்குகிறார்.
தேவையான பொருட்கள்:
1 - வீட்டில் செய்த ரொட்டி
1 - முட்டை
உப்பு
நறுக்கிய வெங்காயம்
நறுக்கிய மிளகாய் (பச்சை வெங்காயம்)
நறுக்கிய தக்காளி
நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
தக்காளி கெட்ச்அப் (விரும்பினால்)
சீஸ் துண்டாக்கப்பட்ட (விரும்பினால்)
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
நீங்கள் செய்ய வேண்டியது:
முதலில் வீட்டில் செய்த ரொட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேற்பக்கத்தில் ஒரு சிறிய வெட்டு வெட்டி அதில் ஒரு பாக்கெட் உருவாக்க வேண்டும். இப்போது ஆம்லெட் கலவையை தயார் செய்ய, ஒரு முட்டையை உடைத்து ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றி, அதில் சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும். கடாய் நன்றாக சூடாகிய பின்னர், பாத்திரத்தில் உள்ள முட்டையை நன்றாக கலக்கி, அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், தக்காளி, கொத்தமல்லி சேர்க்கவும். பின்னர் மீண்டும் நன்றாக கலக்க வேண்டும்.
இப்போது வாணலியில் சிறிது எண்ணெயைத் தூறவும். அதில் முன்பு பாக்கெட் போல் வெட்டி வைத்திருந்த ரொட்டியை வாணலியில் வைக்கவும். பின்னர் அதை ஒரு பக்கமாக சூடாக்க வேண்டும். மிதமாக சூடான பின்னர் அதில் முட்டை கலவையை ஊற்ற வேண்டும். அதன் பின் ரொட்டியின் மீது சிறிதளவு எண்ணெயை தூறல் போல் விட வேண்டும். இப்போது இருபுறமும் நன்றாக சமைக்கவும். இப்போது நீங்கள் விரும்பிய ஆம்லெட் ரொட்டி தயாராகி இருக்கும். உங்களுக்கு விருப்பமான சில கெட்ச்அப் அல்லது சட்னியுடன் முட்டை ரொட்டியைச் சேர்த்து பரிமாறி உண்ணலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil