ஒரு கப் எலுமிச்சை தேநீர் போல ஆரோக்கியமான பானம் வேறுஎதுவும் இல்லை என்பதை தேயிலை ஆர்வலர்கள் அறிவார்கள். இந்த பானம் சுவையாக இருப்பததோடு மட்டுமல்லாமல் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இப்போது, பலர் தங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயற்கை வைத்தியத்தை நம்பியுள்ளனர். எனவே, நீங்களும் ஆரோக்கியத்தின் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வழிகளைத் தேடுகிறீர்கள் என்றால், எலுமிச்சை தேநீரை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள சில காரணங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
புதிதாக தயாரிக்கப்பட்ட ஒரு கப் சூடான எலுமிச்சை தேநீர் உங்கள் சளி தொல்லையை கவனித்துக்கொள்வதாக நம்பப்படுகிறது. இந்த தேநீர் தயாரிக்கும் போது, அதனுடன் சிறிது தேன் சேர்த்து, காலையில் முதலில் அதை பருகுங்கள். நீரேற்றத்துடன் இருக்க இது ஒரு சிறந்த வழியாகும், அதுவும் இப்போது கோடைகாலத்தில், இது ஒரு அமுதமாக இருக்கலாம். பலர் காபி, வழக்கமான தேநீர் மற்றும் பிற சாறுகளை குடிக்கிறார்கள். ஆனால் எலுமிச்சை தேநீர் அவைகளுக்கு ஆரோக்கியமான மாற்றாக இருக்கும்.
எலுமிச்சை தேநீரில் வைட்டமின் சி ஏற்றப்பட்டுள்ளது, இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு செல்களை சேதமடையாமல் பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வைட்டமின் சி தான் உடலுக்கு ஜலதோஷத்தை எதிர்த்துப் போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். இது பல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது மற்றும் காயங்களை குணப்படுத்த உதவும்.
எலுமிச்சை தேநீர் வளர்சிதை மாற்றத்திற்கும் சிறந்தது. இது உங்கள் உடல் எடையை வேகமாக இழக்கச் செய்யும். விஞ்ஞான ரீதியாக, இது நடக்கிறது, ஏனெனில் தேநீர் உடலிலுள்ள நச்சுக்களை அகற்றி, உடலை சுத்தமாக வைத்திருக்கிறது. சரியான எடை இழப்புக்கு ஏற்றவாறு தேநீர் தயாரிக்க, அதில் கொஞ்சம் இஞ்சி மற்றும் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்வது நல்லது.
தேயிலை செரிமானத்திற்கும் சிறந்தது. இது குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் போன்ற தொந்தரவுகளை குணப்படுத்தும், இதற்கு தேநீரில் சிறிது இஞ்சியைச் சேர்த்தால் போதும். இது அஜீரணம் மற்றும் பிற இரைப்பை குடல் பிரச்சினைகளை நீக்குவதாக உறுதியளிக்கிறது.
எலுமிச்சை தேநீரை எவ்வாறு தயாரிப்பது?
இதற்கான செயல்முறை மிகவும் எளிது. உங்களிடம் ஒரு கப் தண்ணீர், ஒரு எலுமிச்சை, ஒரு டீஸ்பூன் தேயிலை இலைகள் மற்றும் சிறிது தேன் இருந்தால் இந்த ஆரோக்கிய பானத்தை தயாரிக்கலாம்.
முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து தேயிலை இலைகளை அதில் சேர்க்கவும். அதை நன்றாக கொதிக்க விடவும்.
அடுத்து அதில் புதிதாக பிழிந்த எலுமிச்சை சாறுகளை சேர்க்கவும்.
இது இளஞ்சூட்டில் கொதிக்கும்போது, சுவைக்கு சிறிது தேன் சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது.
பின்பு அதை வடிகட்டி பருகவும். இப்போது இந்த ஆரோக்கியமான பானத்தை நீங்களும் தயார் செய்து அனுபவியுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil