Advertisment

நறுக்கிய முந்திரி, வெண்ணெய்... இப்படி தயிர்ச் சாதம் செய்தால் குட்டீஸ்க்கு ரொம்ப புடிக்கும்!

Lifestyle news in tamil, tasty curd rice receipe: தயிர்சாதம் செய்யும் போது அதில் முந்திரி பருப்பை சேர்ப்பதன் மூலம் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுமாறு தயிர் சாதம் செய்யலாம்

author-image
WebDesk
New Update
நறுக்கிய முந்திரி, வெண்ணெய்... இப்படி தயிர்ச் சாதம் செய்தால் குட்டீஸ்க்கு ரொம்ப புடிக்கும்!

நம்முடைய மதிய உண்வில் தயிர் எப்போதும் இடம்பெறும். அதுவும் கோடைக்காலத்தில் சொல்லவே வேண்டாம், தயிர் சேர்த்துக் கொள்ளாதவர்களை பார்ப்பது அரிது. சிலரோ மதியத்திற்கு தயிர் சாதத்தை மட்டுமே சாப்பிடுவார்கள்.

Advertisment

வயிற்றுப் பிரச்சனைகள், அஜீரணக் கோளாறுகள், மந்தத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு தயிர்சாதம் நல்லது. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இதய நோய்கள் வருவதை தடுக்கவும் உதவுகிறது. மேலும் உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கும் உதவுகிறது.

இவ்வளவு நன்மைகள் உள்ள தயிர்சாதத்தை எல்லோரும் விரும்பமாட்டார்கள். அதுவும் குழந்தைகளை பொறுத்தவரை தயிர்சாதத்தை சில குழந்தைகள் மட்டுமே விரும்பி சாப்பிடுவார்கள். அதேநேரம் தயிர்சாதம் செய்யும் போது அதில் முந்திரி பருப்பை சேர்ப்பதன் மூலம் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுமாறு தயிர் சாதம் செய்யலாம். இந்த தயிர்சாதம் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 1 கப்,

பால் – ½ கப்,

தயிர் – 1 ½  கப், புளிக்காத புதிய தயிராக இருப்பது நல்லது.

இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்தரைத்த விழுது – 1 டீஸ்பூன்,

வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,

பெருங்காயம் – ½  டீஸ்பூன்,

கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு,

கடுகு – ½  டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 3,

முந்திரி பருப்பு– 4 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கியது,

திராட்சை – 20,

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

முதலில் சாதத்தை குழைவாக வேக வைத்து வடித்து வைத்துக் கொள்ளவும். பின் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சூடான சாதத்தை போட்டு அதனுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பால் மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின் கடுகு, மிளகாய், நறுக்கிய முந்திரி, திராட்சை ஆகியவற்றை போட்டு தாளித்து வைத்துக் கொள்ளவும். இந்த தாளிப்பை கலந்து வைத்துள்ள சாதத்தில் சேர்த்து நன்றாக கலக்குங்கள். இப்போது அருமையான தயிர் சாதம் ரெடி.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment