lifestyle news in tamil : ஒருவரின் உடலில் இரத்த சிவப்பு அணுக்கள் (ஹீமோகுளோபின்) குறைந்து காணாப்படுவதால் உடல் பலவீனமாக காணப்படுகிறார். அதோடு இரத்த சோகை, உடல் சோம்பல் போன்ற நோய்கள் எளிமையாக தாக்குகின்றன. இது போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கும், இரத்த சிவப்பு அணுக்களின் சதவிகிதத்தை அதிகரிப்பதற்கும் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை உண்ண வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகிறார்கள்.
இரத்த சிவப்பு அணுக்களின் சதவிகிதத்தை அதிகரிப்பதற்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள் சிலவற்றை மருத்துவர் டிக்சா பாவ்சர் இங்கு பரிந்துரை செ ய்துள்ளார்.
கருப்பு எள்
இதில் இரும்பு, தாமிரம், துத்தநாகம், செலினியம் மற்றும் வைட்டமின் பி 6, ஈ மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
எப்படி தயார் செய்வது:
1 தேக்கரண்டி உலர்ந்த கருப்பு எள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை நன்றாக வறுக்கவும். பின்னர் அதில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் நெய்யுடன் கலந்து சிறு சிறு உருண்டைக்ளாக பிடிக்கவும். அதன் பிறகு நன்றாகஉலர வைக்கவும். இப்போது அதை நீங்கள் உண்ணலாம். இது உங்கள் உடலில் இரும்புச் சத்தை அதிகரிக்க உதவுகின்றது.
பேரீட்சை மற்றும் திராட்சை
இந்த உலர்ந்த பழ கலவையானது இரும்பு, மெக்னீசியம், தாமிரம் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
எப்படி உட்கொள்வது:
2-3 பேரீட்சைகளும், ஒரு பிடி திராட்சையும் சிற்றுண்டியாக காலை உணவுக்கு முன்னர் எடுத்துக் கொண்டால் உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு இரும்புச் சத்தை அதிகரிக்கின்றது.
பீட்ரூட் மற்றும் கேரட்
இது வைட்டமின் சி- யை உள்ளடக்கியுள்ளது.
எப்படி தயார் செய்வது:
ஒரு கப் நறுக்கிய பீட்ரூட் மற்றும் கேரட் சேர்த்து, நன்கு கலந்து, சாற்றை வடிகட்டி, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து
நன்றாக சாறு போன்று வைத்து கொள்ள வேண்டும். இதை தினமும் காலையில் தவறாமல் குடித்து வந்தால் இரும்புச் சத்தை அதிகரிக்கும்.
வீட் கிராஸ்
இது பீட்டா கரோட்டின், வைட்டமின் கே, ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்பு, புரதம் மற்றும் ஃபைபர் வைட்டமின் சி, பி வைட்டமின்கள் போன்ற பல மூலப் பொருள்களை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. மேலும் இரத்தத்தை உற்பத்தி செய்யும் காரணிகளையும் கொண்டுள்ளது.
எப்படி உட்கொள்வது:
தினமும் ஒரு டீஸ்பூன் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது உங்கள் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துகிறது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.
முருங்கை இலை:
முருங்கை இலையில் ஏராளமான இரும்புச்சத்து, வைட்டமின்கள் ஏ, சி மற்றும் மெக்னீசியம் போன்றவை உள்ளன.
எப்படி உட்கொள்வது:
முருங்கை இலையை தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். 1தேக்கரண்டி முருங்கை இலை தூளோடு தண்ணீர் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் குடல் சம்பந்தமான எந்த பிரச்சனைகளும் எழாது. அதோடு உடலில் இரும்புச் சத்தின் அளவை அதிகரிக்கவும் உதவுகின்றது.
இது போன்ற வீட்டு வைத்தியங்களை அன்றாட பயன்படுத்தினால் நம்முடைய இரத்த சிவப்பு அணுக்களின் அளவு அதிகரிப்பதோடு, உடலில் இரத்த சம்பந்தமாக ஏற்படும் நோய்களை குணமாக்கவும் செய்யும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil