Lifestyle Tamil News: நீங்கள் தேங்காய், வெங்காயம் மற்றும் தக்காளி போன்ற சட்னிகளை சுவைத்திருக்கலாம். ஆனால் எப்போதாவது நீங்கள் பிளாஸ்டிக் சட்னியை முயற்சித்தீர்களா? வங்காளத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த சட்னியின் முக்கிய மூலப்பொருள் பச்சை பப்பாளி. இது மா சட்னியைப் போலவே, இந்த சட்னியும் பிளாஸ்டிக் போன்ற அமைப்பில் இருப்பதால் இந்த பெயரைப் பெற்றுள்ளது.
தேவையானவை
1½ கப் - மூல பப்பாளி சிறிய சில்லுகளாக வெட்டவும் அல்லது அரைக்கவும்
1½ கப் - நீர்
¼ டீஸ்பூன் - உப்பு
7 டீஸ்பூன் - சர்க்கரை
2 டீஸ்பூன் - எலுமிச்சை சாறு
திராட்சை
நீங்கள் செய்ய வேண்டியவை:
முதலில் பப்பாளியை உரித்து பாதியாக வெட்ட வேண்டும். பின்னர் பப்பாளிக்குள் இருக்கும் விதைகளையும் கடினமான தோலையும் மையத்திலிருந்து அகற்ற வேண்டும். இப்போது அதை ஒரு கூர்மையான கத்தியால், மெல்லிய துண்டுகளாக வெட்ட வேண்டும். பின்னர் பப்பாளியை தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
இப்பொது ஒரு கடாயை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்து வரும் போது பப்பாளியை சேர்க்கவும் பின்னர் நன்றாக கிளறவும். அதோடு தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரைசேர்க்க வேண்டும். பிறகு ஐந்து நிமிடங்கள்வரை வேக வைக்க வேண்டும்.
பப்பாளி நன்றாக மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் சிறிதளவு திராட்சை சேர்த்து மீண்டும் வேக வைக்க வேண்டும். இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து மற்றொரு 3 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். பப்பாளி நன்றாக வெந்து சிகப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அப்படி வந்த பிறகு சில நிமிடங்கள் குளிர வைக்க வேண்டும். இப்பொது நீங்கள் விரும்பிய பப்பாளி சட்னி தயாராகி இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"