/tamil-ie/media/media_files/uploads/2019/08/Standing-while-eating.jpg)
நின்று கொண்டே சாப்பிடுதல்
பெரும்பாலானோர் வீட்டில் அல்லது வெளி இடங்களில் நின்று கொண்டே சாப்பிட்டு பழகியிருப்பார்கள். ஆனால் சாப்பிடும் போது நாம் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அதாவது, சாப்பிடுவதற்கு முன்போ, சாப்பிட்ட உடனேயோ நிறைய தண்ணீர் குடிக்க கூடாது, சாப்பிடும்போது பழங்களை உட்கொள்ளக்கூடாது. அதேபோல, நின்று கொண்டே சாப்பிட கூடாது . ஏனெனில் நின்றுகொண்டு சாப்பிடுவதால் மன அழுத்தம் மற்றும் நாவின் சுவை அரும்புகள் பாதிக்கப்படும் என ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
நாம் சாப்பிடும்போது, நேராக அமர்ந்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் உணவின் ருசி அதிகமாக இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். நம் உடலில் உணவின் மணம் மற்றும் ருசியை கடத்த வெஸ்டிபுலார் சென்ஸ் மிகவும் அவசியம். ஆனால் நின்று கொண்டு சாப்பிடும்போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக உடலில் இரத்த ஓட்டம் கீழ் நோக்கியே பாய்கிறது. இதன் விளைவாக, உடலில் இரத்தத்தை மேல் நோக்கியும் பாய செய்வதற்காக, இதயம் பெரும்பாடு படுகிறது.
மேலும் இது ஹைப்போதலாமிக் பிட்யூட்ரி அட்ரினலை தூண்டி மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசால் ஹார்மோனை சுரக்க செய்கிறது.
இந்நிலை தொடர்ந்தால் உடலில் ருசியை அறியக்கூடிய மற்றும் உணர்வுகளை கடத்தக்கூடிய பகுதிகள் பாதிக்கப்படும். இதனால் மன அழுத்தமும் ஏற்படும். அதனால், எப்போதும் சம்மணமிட்டு சாப்பிட வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.