ரூ 510-க்கு மாடித்தோட்டம் கிட்: என்னென்ன உதவிகள் வழங்குகிறது அரசு?

terrace garden tamilnadu govt scheme: தமிழக அரசின் தோட்டக்கலை துறை ரூ.510 -ல் மானிய விலையுடன் முக்கிய உபகரணங்களையும், சொட்டு நீர் குழாய் அமைப்புகளையும் வழங்குகிறது.

By: February 13, 2021, 4:25:02 PM

Lifesyle news in tamil: நகர்ப்புற வீடுகளில் வசித்து வரும் நாம், சத்தான காய்கறிகள் பறிக்கவும், பூச் செடிகளை வளர்க்கவும் நம்முடைய மாடியில் தோட்டம் ஒன்று அமைத்து அதைப் பேணி காத்து வருகிறோம். இவ்வாறன மாடித் தோட்டங்ககளை அமைப்பதற்கு தற்போது அரசே முன் வந்து பல உதவிகளை செய்து வருகிறது. அதில் தோட்டம் அமைப்பதற்கான விதைகளையும், குரோபேக்களையும் மானிய விலையில் கொடுத்து, மாடிகளில் தோட்டம் அமைப்பதற்கு ஊக்குவித்து வருகிறது.

தமிழக அரசின் தோட்டக்கலை துறை, இதை ஒவொரு மாவட்டத்திலும் செய்லபடுத்தியும் வருகிறது. அதோடு மாடித் தோட்டம் அமைப்பதற்கான செயல் விளக்க கூட்டங்களையும் நடத்தி வருகிறது. மாடித் தோட்டம் அமைப்பதற்கான முக்கிய உபகரணங்களையும், சொட்டு நீர் குழாய் அமைப்புகளையும் கூட மானிய விலையில் வழங்குகிறது.

ரூ 510-க்கு மாடித்தோட்டம் கிட்:

தமிழக அரசின் தோட்டக்கலை துறை ரூ.510 -ல் மானிய விலையுடன் முக்கிய உபகரணங்களையும், சொட்டு நீர் குழாய் அமைப்புகளையும் வழங்குகிறது. இந்த கிட்-டில் பின்வருபவையும் அடங்கும்.

6 குரோபேக், அதில் 2 கிலோ எடையுள்ள காயர்பித் கட்டிகள் உள்ளன.

6 பாக்கெட் காய்கறி விதைகள்,

200 கிராம் அசோஸைபைரில்லம்,

200 கிராம் பாஸ்போ பாக்டீரியா,

200 பயோ கன்ட்ரோல் ஏஜென்ட்,

100 மில்லி அசாட்டிராக்டின் (Azadirachtin) அதாவது வேப்பெண்ணெய் மருந்து

இவற்றோடு ஒரு செயல் விளக்க கையேடும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கிட்-டில் ஒவ்வொரு பாக்கெட்டிலும் அதிக விதைகள் உள்ளன. அவை அனைத்தும் ஹைபிரிட் ரகங்களாக உள்ளன. இவற்றை உங்களுக்கு அருமையில் உள்ள தமிழக அரசின் தோட்டக் கலை துறையிடம் மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விபரங்க்களுக்கு உங்கள் அருகாமையில் உள்ள தமிழக அரசின் தோட்டக்கலை துறையை அணுகவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Lifesyle news in tamil rs 510 tamilnadu govt terrace garden kit and more benafits

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X