கர்ப்பம் ஒரு பெண்ணின் உடலில் நிறைய ஹார்மோன் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. ஒருவரின் வயிற்றின் மேல் கருமையான, கறுப்புக் கோடு தோன்றுவது அத்தகைய இயற்கை நிகழ்வாகும். மருத்துவ மொழியில் லீனியா நிக்ரா (linea nigra) என்று அழைக்கப்படும் இந்த கோடு என்ன?
Advertisment
கர்ப்ப காலத்தில் முக்கியமாகத் தெரியும் இந்த உடல் நிகழ்வைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள நிபுணர்களை அணுகினோம்.
கர்ப்ப காலத்தில் உங்கள் உடலில் ஹார்மோன் அளவு அதிகரிப்பதால், லீனியா நிக்ரா அல்லது கருப்பு கோடு இயற்கையாகவே உருவாகிறது.
ஒரு லீனியா நிக்ரா எப்போதும் இருக்கும், ஆனால் கர்ப்ப காலத்தில் உங்கள் ஹார்மோன்கள் அதிகரிக்கும் வரை இது தெரியாது.
Advertisment
Advertisements
லீனியா நிக்ரா 3 மாதங்களுக்கு பிறகு (சுமார் 20 வாரங்கள்) கவனிக்கப்படும் அளவுக்கு பெரும்பாலான நபர்களில் போதுமான அளவு கருமையாகிறது.
நீங்கள் கர்ப்பமாக இருப்பதற்கு முன், இந்த கோடு லீனியா ஆல்பா அல்லது "வெள்ளை கோடு" என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது லீனியா நிக்ரா ஏற்படுகிறது, மேலும் கோடு கறுப்பாகவும் வெளிப்படையாகவும் மாறுகிறது, என்று டாக்டர் ஷாலினி விஜய் விவரித்தார்.
கர்ப்ப காலத்தில் மெலனின் அதிகரிப்பதற்கான குறிப்பிட்ட காரணம் தெரியவில்லை என்றாலும், நஞ்சுக்கொடியின் ஹார்மோன் மெலனோசைட்-தூண்டுதல் ஹார்மோனின் உற்பத்திதான் இந்த நிகழ்வுக்கு காரணம் என்று பெரும்பாலான மருத்துவ வல்லுநர்கள் கருதுகின்றனர், என்று டாக்டர் ஷோபா குப்தா கூறினார்.
குறிப்பிடத்தக்க வகையில், மெலனின் நிறமி உங்கள் சருமத்திற்கு அதன் நிறத்தை அளிக்கிறது. கர்ப்ப காலத்தில் மெலனின் அதிகரிப்பதால் உங்கள் தோல் கருமையாகிறது. மெலஸ்மா மற்றும் டார்கர் அரோலாஸ் (Melasma and darker areolas) ஒரே ஹார்மோனால் ஏற்படுகின்றன. சில உடல் பாகங்கள் ஏன் பாதிக்கப்படுகின்றன, மற்றவை ஏன் பாதிக்கப்படாமல் இருக்கின்றன என்பது குறித்து யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை, என்றார் டாக்டர் குப்தா.
லீனியா நிக்ரா, உங்கள் அந்தரங்க எலும்பிலிருந்து தொப்புள் வரை 1/4 மற்றும் 1/2 அங்குல அகலம் கொண்டது. இது சில சமயங்களில் தொப்புளை தாண்டி உங்கள் மார்பகங்களை நோக்கிப் பரவலாம். இது பழுப்பு அல்லது வெளிர் கருப்பு நிறத்தில் தோன்றும் மற்றும் உங்கள் தோலின் நிறத்தை விட கருமையாக இருக்கும்.
லீனியா நிக்ராவுடன், கர்ப்பம் தொடர்பான மருத்துவ பிரச்சனைகள் எதுவும் இல்லை. இது கர்ப்பத்தின் ஒரு பொதுவான அம்சம் என்று டாக்டர் குப்தா குறிப்பிட்டார்.
இது எல்லாருக்கும் நிகழ்கிறதா?
டாக்டர் ஷாலினியின் கூற்றுப்படி, 80 சதவீத கர்ப்பிணிப் பெண்களில் லீனியா நிக்ரா உள்ளது, இருப்பினும், இது உங்கள் தோலின் நிறத்தைப் பொறுத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தெரியும்.
வெள்ளையாக இருப்பவர்களைக் காட்டிலும் கருமையாக உள்ளவர்கள் மிகவும் முக்கியமான லீனியா நிக்ராவைக் கொண்டுள்ளனர். ஏனென்றால், வெளிர் நிறமுள்ளவர்களை விட கருமையான சருமம் உள்ளவர்களுக்கு பிக்மென்டேஷன் அதிகம், என்கிறார் டாக்டர் ஷாலினி.
அது எப்படி போகும்?
டாக்டர் குப்தாவின் கூற்றுப்படி, நல்ல செய்தி என்னவென்றால், பிரசவத்திற்குப் பிறகு, உங்கள் லீனியா நிக்ரா லேசாகிவிடும் மற்றும் உங்கள் ஹார்மோன் அளவுகள் இயல்பு நிலைக்குத் திரும்பும்.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, மருந்துகள், டாப்பிகல் ஆயின்மெண்ட்ஸ் களிம்புகள் அல்லது பிற சருமத்தை ஒளிரச் செய்யும் பொருட்களைப் பயன்படுத்த நாங்கள் அறிவுறுத்துவதில்லை.
சூரியனின் புற ஊதா கதிர்கள் உங்கள் லீனியா நிக்ராவை கருமையாக்கும் என்பதால், சன்ஸ்கிரீன் அணிவது உதவியாக இருக்கும்.
ஃபோலிக் அமிலத்தின் உதவியுடன் லீனியா நிக்ராவின் தீவிரத்தை குறைக்கலாம். இலை பச்சை காய்கறிகள், பீன்ஸ் மற்றும் முழு கோதுமை ரொட்டி போன்ற உணவுகள் அனைத்தும் ஃபோலிக் அமிலத்தைக் கொண்டிருக்கின்றன, என்று டாக்டர் குப்தா கூறினார்.
குழந்தை பிறந்த பிறகு, ப்ளீச்சிங் லோஷனைப் பயன்படுத்துவது ஒரு விருப்பமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் பாலூட்டவில்லை என்றால் மட்டுமே. உங்கள் லீனியா நிக்ரா எப்படி இருக்கிறது என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள், என்று டாக்டர் குப்தா வலியுறுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil