PF கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இத்தனை நன்மைகளா? : உடனே இணைப்பீர்...
Link Aadhaar card with Provident Fund (PF) account : PF கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதால், இருப்புத்தொகை உள்ளிட்ட விபரங்களை நாம் இருந்த இடத்திலிருந்தே உடனுக்குடன் அறிவது உள்ளிட்ட எண்ணிலடங்கா சேவைகளை பெறலாம்.
Link Aadhaar card with Provident Fund (PF) account : PF கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதால், இருப்புத்தொகை உள்ளிட்ட விபரங்களை நாம் இருந்த இடத்திலிருந்தே உடனுக்குடன் அறிவது உள்ளிட்ட எண்ணிலடங்கா சேவைகளை பெறலாம்.
PF கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதால், இருப்புத்தொகை உள்ளிட்ட விபரங்களை நாம் இருந்த இடத்திலிருந்தே உடனுக்குடன் அறிவது உள்ளிட்ட எண்ணிலடங்கா சேவைகளை பெறலாம்.
Advertisment
நாம் பணிபுரியும் இடத்தில் அந்த நிறுவனத்தினரால் பிஎப் கணக்கு துவங்கப்படும். நமது பங்கு, நிறுவனத்தின் பங்கு மற்றும் பென்சன் என 3 பிரிவுகளில், மாதந்தோறும். அந்த பிஎப் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். நிறுவனத்துக்கு நிறுவனம் பிஎப் கணக்கு வேறுபடும். இதனிடையே, தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அவர்கள் எத்தனை நிறுவனங்களுக்கு மாறினாலும், அவர்களுக்கு ஒரு நிரந்தர எண் வழங்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் UAN எண் அறிமுகப்படுத்தப்பட்டது. பிஎப் கணக்குகள் எத்தனை இருந்தாலும், அந்த கணக்குகள் அனைத்தும் இந்த UAN எண் கீழ் ஒன்றுசேர்ந்துவிடும். இதன்மூலம், தொழிலாளர்கள் தங்களது கணக்கில் உள்ள இருப்புத்தொகையை அறிவதற்கும், தேவை ஏற்படும்போது பணத்தை பெறுவதற்கும் வழிவகை ஏற்பட்டுள்ளது. இந்த தொழிலாளர் நலன் சார்ந்த சேவைகளை நிர்வகிப்பதற்காக PF அமைப்பு, EPFO என்ற இணையதளத்தின் மூலம், தொழிலாளர்களுக்கு இந்த சேவைகளை அளித்து வருகிறது.
இந்த EPFO இணையதளத்தின் மூலம், ஊழியர்கள், தங்கள் கணக்கில் உள்ள இருப்புத்தொகையை அறிந்துகொள்ளலாம். தேவை ஏற்படும்போது இந்த இணையதளத்தின் மூலமாகவே அவர்கள் முழுப்பணத்தையோ அல்லது பிஎப் அட்வான்ஸ் பணத்தை பெற்று வந்தனர்.
Advertisment
Advertisements
பிஎப் கணக்குடன் ஆதார் எண் இணைப்பு : பிஎப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்கும் பட்சத்தில், நாம் இருந்த இடத்தில் இருந்தே நமது பிஎப் கணக்கில் உள்ள இருப்புத்தொகை (பேலன்ஸ்), பிஎப் பங்குத்தொகை, அதில் செய்யப்படும் மாற்றங்கள், EPFOவில் மேற்கொள்ளப்படும் புதிய மாற்றங்கள், திட்டங்கள் உள்ளிட்டவைகள் உடனுக்குடன் அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணை, பிஎப் கணக்குடன் இணைக்கும் வழிமுறை
epfindia.gov.in இணையதளத்திற்கு சென்று லாகின் செய்யவும்
அதில் KYC போர்டலுக்கு செல்லவும்
அதில் உள்ள link UAN Aadhaar என்பதை தெரிவு செய்யவும்
UAN எண் மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்யவும்
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்
அதை அங்கே பதிவிடவும்
பின் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிடவும்
பின் சப்மிட் பட்டனை அழுத்தவும்
மீண்டும் உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை அங்கே பதிவிடும்பட்சத்தில், பிஎப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் நிகழ்வு நிறைவுபெறும்.