உதடு வெடிப்பால் அவதிப்படுபவரா நீங்கள்? அப்போ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

உதடு வெடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் பின்பற்றக் கூடிய சில எளிமையான டிப்ஸ்கள் இப்பதிவில் வழங்கப்பட்டுள்ளது. இதனை செய்வதன் மூலம் மாற்றத்தை உணரலாம்.

உதடு வெடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் பின்பற்றக் கூடிய சில எளிமையான டிப்ஸ்கள் இப்பதிவில் வழங்கப்பட்டுள்ளது. இதனை செய்வதன் மூலம் மாற்றத்தை உணரலாம்.

author-image
WebDesk
New Update
Lip crack

குளிர் காலத்தில் பலரும் உதடு வெடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள். இதனால் சரியாக சாப்பிட முடியாத சூழல் உருவாகும். இந்நிலையில், உதடு வெடிப்பை போக்குவதற்கான வழிமுறைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

Advertisment

தேன் இதற்கு சிறந்த மருந்தாக அமையும். தினசரி தூங்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் சிறிது தேன் தடவி விட்டு, பின்னர் சற்று வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவலாம். இவ்வாறு செய்தால் உதடு வெடிப்பு சரியாகும்.

இதேபோல், தேங்காய் எண்ணெய்யும் இதற்கு சிறப்பான மருந்தாக செயல்படும். அதன்படி, அடிக்கடி உதட்டில் தேங்காய் எண்ணெய் தடவலாம். இதனால் ஈரப்பதமாக இருப்பதுடன், வறட்சியும் ஏற்படாமல் இருக்கும்.

கற்றாழை ஜெல்லும் உதடுகளை வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளும். இதனை தினமும் உதட்டில் தடவினால், வெடிப்பு சரியாவதுடன், உதடுகள் பளபளப்பாக இருக்கும்.

Advertisment
Advertisements

இவை அனைத்திற்கும் மேலாக போதுமான அளவு தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். குளிர் காலத்தில் அதிகமாக தாகம் எடுக்காவிட்டாலும், தேவையான அளவு தண்ணீரை பருக வேண்டும். இது நம் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து போகாமல் பார்த்துக் கொள்ள உதவும்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Home remedies to hydrate your lips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: