/indian-express-tamil/media/media_files/2025/07/23/dry-lips-2025-07-23-13-59-13.jpg)
சர்க்கரை உடன் இதை சேர்த்து அப்ளை பண்ணுங்க… உதடுகள் கருமை நீங்கி சாஃப்ட்டாக மாறும்; டாக்டர் ராஜலட்சுமி
நமது தோலின் பளபளப்பிற்காகவும், தலைமுடியின் அழகுக்காகவும் நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். ஆனால், நம் முகத்தின் முக்கியமான பகுதியான உதடுகளைப் பற்றி பெரும்பாலும் மறந்துவிடுகிறோம். உதடுகள், வெறும் அழகு மட்டுமல்ல; அவை நாம் தெளிவாகப் பேசுவதற்கும், உணவை சுவைப்பதற்கும் அத்தியாவசியமானவை. உதடுகளைப் பெரிதாக்க அழகுசாதன சிகிச்சைகளை நாடுகிறார்கள். உதடுகள் வறண்டு, வெடிப்பதற்கு பல காரணங்கள் உண்டு. இவை வெறும் மேலோட்டமான அழகுப் பிரச்னைகள் அல்ல; அடிப்படை உடல்நலக் கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறார் டாக்டர் ராஜலட்சுமி.
உதடுகள் வறண்டு போவதற்கான காரணங்கள்:
உதடுகள் வறண்டு போவதற்கான பல்வேறு காரணங்களை டாக்டர் ராஜலட்சுமி விளக்குகிறார். வறண்ட அல்லது அதிக குளிர்ந்த காற்று, மற்றும் நீண்ட நேரம் வெயிலில் இருப்பது உதடுகளில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலப் பிரச்னைகள் உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி, உதடுகளையும் வறண்டு போகச் செய்யும். சிகரெட் பிடித்தல் போன்ற பழக்கங்கள் உதடு வறட்சிக்கு ஒரு முக்கிய காரணம். வைட்டமின் பி மற்றும் சி பற்றாக்குறை உதடுகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். தைராய்டு பிரச்சனை அல்லது சினைப்பை நீர்க்கட்டி (PCOS) போன்ற ஹார்மோன் தொடர்பான பிரச்னைகளும் உதடு வறட்சிக்கு வழிவகுக்கும்.
ஆரோக்கியமான உதடுகளுக்கான தீர்வுகள்:
எலுமிச்சை, ஆரஞ்சு, குடைமிளகாய் போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்க்கவும். இவை கொலாஜன் உற்பத்திக்கு உதவுகின்றன. கஞ்சி, முட்டை, நெய், பால் போன்ற வைட்டமின் பி நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும். 3 நாட்களுக்கு ஒருமுறை, வீட்டில் தயாரித்த சர்க்கரை, தேன் மற்றும் கற்றாழை கலந்த ஸ்க்ரப் பயன்படுத்தி இறந்த செல்களை நீக்கலாம். உதடுகளை மென்மையாக்கும்.
இரவில் தூங்குவதற்கு முன், தேங்காய் எண்ணெய் (50 மிலி), பாதாம் எண்ணெய் (50 கிராம்), மாதுளை சாறு (50 மிலி) மற்றும் தேன் மெழுகு (50 கிராம்) கலந்து தயாரித்த லிப் பாமை தடவவும். இது உதடுகளுக்கு ஈரப்பதம் அளிக்கும். அரை டீஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லி, அரை டீஸ்பூன் உறைந்த தேங்காய் எண்ணெய், 5 துளிகள் தேன் கலந்த கலவையை இரவில் தடவுவது, உதடுகளின் வறட்சியைப் போக்கி, ரசாயனங்களால் ஏற்பட்ட கருமையைப் போக்க உதவும் என்கிறார் டாக்டர் ராஜலட்சுமி.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.