scorecardresearch

உதடுகளுக்கு சன்ஸ்கீரின்; லிப் பிக்மென்டேஷன் பிரச்னைக்கு மருத்துவர் சொல்லும் தீர்வு

லிப் பிக்மென்டேஷன் மிகவும் பொதுவானது, சரியான சிகிச்சைகளைப் பயன்படுத்தி இதை எளிதில் மாற்றியமைக்க முடியும் என்று டாக்டர் கீதிகா மிட்டல் குப்தா தெரிவித்தார்.

lifestyle
Lip pigmentation

பிக்மென்டேஷன் என்பது தோல் தொடர்பான பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும். இதில், நமது சருமம் கருமையாகி புள்ளிகள் ஏற்படும் அல்லது கருமையான திட்டுகள் வரும்.

தோல் பிக்மென்டேஷன் போலவே, உதடு பிக்மென்டேஷனும் (lip pigmentation) மிகவும் பொதுவான பிரச்சனையாகும், மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இதில் பாதிக்கப்படலாம். ஹெல்த்லைன் படி, உதடுகள் கருமையாக இருப்பது ஹைப்பர் பிக்மென்டேஷனின் விளைவாக இருக்கலாம். இது மெலனின் அதிகமாக இருப்பதால் ஏற்படும் பொதுவாக பாதிப்பில்லாத நிலை.

மாசு, சூரியக் கதிர்கள் போன்ற பல காரணங்களால் உதடுகள் நிறம் மாறலாம். சில பழக்கவழக்கங்கள் நம் உதடுகளை கருமையாக மாற்றினாலும், பிக்மென்டேஷனை மாற்றுவதற்கான வழிகள் இன்னும் உள்ளன.

லிப் பிக்மென்டேஷன் மிகவும் பொதுவானது, சரியான சிகிச்சைகளைப் பயன்படுத்தி இதை எளிதில் மாற்றியமைக்க முடியும் என்று டாக்டர் கீதிகா மிட்டல் குப்தா தெரிவித்தார்.

என்ன செய்வது?

*பகலில் வெளியே செல்லும் முன் உதடுகளில் சன்ஸ்கிரீன் போடவும்.

*நீங்கள் புகைபிடித்தால் அதை விட்டுவிடுங்கள். புகைபிடித்தல் உங்கள் உதடுகளை காலப்போக்கில் கருமையாக்கும்.

*உங்கள் உதடுகளை கடிக்கவோ அல்லது நக்கவோ கூடாது, ஏனெனில் இது வீக்கத்தால் தூண்டப்பட்ட ஹைப்பர் பிக்மென்டேஷனை ஏற்படுத்தும்.

*ரெட்டினாய்டுகள், கோஜிக் அமிலம், சாலிசிலிக் அமிலம் அல்லது நியாசினமைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கிரீம்கள் மற்றும் சீரம்களை முயற்சிக்கவும்.

*வாரத்திற்கு இரண்டு முறை கெமிக்கல் பீல் பயன்படுத்தவும்.

*வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை லேசான எக்ஸ்ஃபோலியேட்டர் பயன்படுத்தவும்.

எந்தவொரு க்ரீம் அல்லது சீரம் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்யவும், எந்த சிகிச்சையையும் தொடங்கும் முன் மருத்துவரை அணுகுமாறு டாக்டர் கீதிகா பரிந்துரைத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Lip pigmentation expert tips for pigmented lips