பெரும்பாலானோர் லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கும்போது தங்கள் சரும நிறத்தையே முதன்மையாகக் கருதுகிறார்கள். "நான் மாநிறமாக இருக்கிறேன், எனக்கு இந்த நிறம் பொருந்தும்", "நான் சிவப்பாக இருக்கிறேன், எனக்கு இது நன்றாக இருக்கும்" என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் லிப்ஸ்டிக் தேர்வு என்பது உங்கள் சரும நிறத்தை விட, உங்கள் உதடுகளின் அளவு மற்றும் பற்களின் அமைப்பைப் பொறுத்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?
Advertisment
மேக்கப் ஆர்டிஸ்ட் சந்தோஷி தனது அனுபவத்தைப் பகிர்கிறார்: ’நான் ஃபேரா இருக்கேன். ஆனா என்னைக்காவது என்ன நீங்க டார்க் லிப்ஸ்டிக்ல பாத்துருக்கீங்களா ரொம்ப ரொம்ப ரேர்.
எப்போ டார்க் லிப்ஸ்டிக் போடுவேன்னா நான் மேக்கப்பே போடாம எங்கயாவது வெளியில போறேன் எங்கயாவது ஒரு இடத்துல அட்டென்ட் பண்றேன்னு சொல்லும்போது அப்போ நான் ரெட்டோ ஒரு பிரைட் ரெட்டோ அந்த மாதிரி பிரிஃபர் பண்ணுவேன்.
ஏன்னா மேக்கப்பே இல்லாம ரொம்ப டல்லா இருக்கறதுக்கு கொஞ்சம் பிரைட் கலர். இல்ல நான் மேக்கப் போட்டேன் அப்படின்னா எப்போதுமே நான் நியூட் கலர்ஸ் தான் பிரிஃபர் பண்ணுவேன். ஏன்னா என்னுடைய வாய் பெருசா இருக்கு. இப்போ நான் டார்க் லிப்ஸ்டிக் போட்டு சிரிச்சேன்னா என்னுடைய போகஸ் ஃபுல்லாவே வந்து என்னுடைய லிப்ஸ் மேல இருக்கும்’, என்றார்.
சில பேருக்கு லிப்ஸ் சின்னதா இருக்கும். ஆனா ஸ்மைல் பண்ணதுக்கு அப்புறம் டீத் பெருசா இருக்கும். சோ நான் டார்க் லிப்ஸ்டிக் போட்டு ஸ்மைல் பண்ணேன்னா அப்ப எங்க போகும் ஃபோக்கஸ்? பிக்சர்ஸ் பார்க்கும்போது என் பிரைடு பெரிய பெரிய டீத் தெரியும். சில பேருக்கு பல்லு தூக்கலா இருக்கும். அவங்க டார்க் லிப்ஸ்டிக் போட்டா என்ன ஆகும்? அவங்களுடைய மைனஸ் இன்னும் தெளிவா தெரியும்.
Advertisment
Advertisements
எனவே, சரியான லிப்ஸ்டிக்கைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் சரும நிறம், உதடுகளின் வடிவம், பற்களின் அமைப்பு ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு தேர்வு செய்யுங்கள். இது உங்கள் ஒட்டுமொத்த தோற்றத்தையும் மேம்படுத்த உதவும்.