சீரியலையும், தமிழ் மக்களையும் பிரிக்க முடியாது. அதில் வரும் நடிகைகளை போல, உடை அணிவது முதல் மேக்கப் வரை பலருக்கும் சீரியல் தான் மினி டுட்டோரியலாக உள்ளது. அதிலும் இப்போது சில டிவி நடிகைகள், கர்ப்ப காலத்தில் கூட, ஓய்வெடுக்காமல் கடினமாக உழைத்து வருகின்றனர். அப்படி ஓயாமல் உழைத்து, தமிழ் ரசிகர்களின் மனம்கவர்ந்த சில டிவி நடிகைகளை இங்கு பார்க்கலாம்!
ஃபரினா ஆசாத்
சென்னையைச் சேர்ந்த ஃபரீனா ஆசாத், தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது சின்னத்திரையின் பிரபலமான கதாநாயகியாக இருக்கிறார். அந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஃபரினா ஆசாத், தன் வாழ்வின் முக்கிய கட்டமான கர்ப்ப காலத்தின் போது கூட படப்பிடிப்புகளுக்கு வருவதை நிறுத்தவில்லை. தன்னுடைய 7வது மாதம் வரை, ஃபரினா ஷீட்டிங் வந்தார். அதிலும் கர்ப்ப காலத்தில்’ ஃபரினா எடுத்த சில போட்டோஷூட்கள் பல விமர்சனங்களையும் கிளப்பியது. ஆனால் அதை எதையும் கண்டுகொள்ளாமல் ஃபரினா வழக்கம்போல மாடலிங், நடிப்பு என ஓடிக்கொண்டே இருந்தார். மீண்டும் பிரசவம் முடிந்து ஒருசில வாரங்களில் கைக்குழந்தையுடன் படப்பிடிக்கு வந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
நந்திதா ஜெனிஃபர்
விஜய் டி.வி.யின் பாக்கியலெட்சுமி சீரியலில் முதலில் நடித்த ராதிகாவை, யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. சீரியலில் அழகும், அவரது அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பும் அவருக்கு ஏராளமான ரசிகர்களைத் தேடித் தந்தது. ஆனால், போகபோக தன்னுடைய கேரெக்டர் நெகட்டிவாக மாறப்போகிறது. எனவே அத்தகைய கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமில்லை என கூறி, ஜெனிஃபர் அந்த சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு கடந்த நவம்பர் 2021 இல் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. கர்ப்ப காலத்தில், அம்மன் மற்றும் பாக்கியலட்சுமி போன்ற சீரியல்களில் இவர் பிஸியாக நடித்து வந்தார்.
ஷாமிலி சுகுமார்
பல சீரியல்களில் நெகட்டிவ் கேரெக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாமிலி சுகுமார். அதிலும் சன் டி.வி.யில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில், அனு கேரெக்டரில் வில்லியாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார். அவரது 7வது மாதத்தில், ஷாமிலி தனது கர்ப்பம் காரணமாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாக தெரிவித்தார்.
ஆல்யா மானசா
விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்து பிரபலமான ஆல்யா, அதன்பிறகு சீரியலில் தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அய்லா என்ற அழகான பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆல்யா, ராஜா ராணி சீசன் 2 மூலம் மீண்டும் விஜய் டிவியில் ரீ-எண்ட்ரீ கொடுத்தார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான ஆல்யா, சீரியலில் இருந்து வெளியேறினார். இப்போது அவருக்கு பதிலாக, ரியா நடிக்கிறார்.
ஹேமா ராஜ்குமார்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹேமா ராஜ்குமார். இதில் ஆரம்பத்தில் மீனாவை நெகட்டிவாக காட்டினர். ஆனால் போகபோக மீனாவின் கதாபாத்திரத்துக்காகவே இந்த சீரியலை நிறைய மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர்.
ஹேமா சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், ஒருகட்டத்தில் அவர் சீரியலில் இருந்து விலகுவார் என வதந்திகள் பரவியது. அப்போது ஹேமா கர்ப்பமாக இருந்தார் ஆனால் குழந்தை பிரசவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்புவரை, ஹேமா சீரியலில் நடித்துக் கொண்டுதான் இருந்தார். அதேபோல, குழந்தை பிறந்து மூன்று மாதத்துக்குள் மீண்டும் நடிக்க வந்துவிட்டார். இம்முறை ஹேமாவுடன் சேர்ந்து அவரின் குழந்தையும் ஒன்றரை வருடத்துக்கும் மேலாக கயல் என்ற ரோலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“