/indian-express-tamil/media/media_files/2025/10/03/tourst-2025-10-03-13-47-26.jpg)
அலுவலகத்தில் வேலை டென்ஷன், குழந்தைகளுக்கு விடுமுறை, என மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பலரும் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக தங்களுக்காக இல்லை என்றாலும் தங்கள் பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை வரும்போது பெற்றோர்கள் கண்டிப்பாக அவர்களை சுற்றுலா அழைத்து செல்வார்கள். அந்த வகையில், அக்டோபர் மாதம் டூர் போக வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க
மைசூர்
தமிழ்நாட்டுக்கு அருகில் இருக்கும் மாநிலமாக கர்நாடகாவில் பல சுற்றுலா தளங்கள் உள்ளன. அதிலும் சுறிப்பாக மைசூர் அரண்மனை உலகளவில் பிரபலமான இடங்களில் ஒன்று. பாரம்பரியமான கலை வடிவங்களை பார்க்க விரும்புவர்கள் கட்டாயம் ஒருமுறையாவது இங்கு சென்றுவர வேண்டும். குறிப்பாக அக்டோபர் மாதத்தில் இங்கு நடைபெறும் தசரா பண்டிகையும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கிறது.
ஆலப்புழா
தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள மற்றொரு மாநிலம் தான் கேரளா. கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் சென்ற இடமெல்லாம், இயற்கை சூழ்ந்த இடங்களாக தான் இருக்கும். குறிப்பாக இங்கு ஆலப்புழா படகு வீடுகளுக்காக புகழ்பெற்றது. இங்கு நடைபெறும் படகு பந்தயங்கள், புகழ் பெற்றவை. மன அமைதி தேவை என்றால் இந்த இடத்தை மிஸ் பண்ணாதீங்க.
கோவா
வெளிநாடுகளில் இருப்பது போன்ற உணர்வை இந்தியாவில் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற இடம் கோவா தான். இந்தியாவின் கடலோர தலைநகரான கோவா அக்டோபர் சிறப்பான வானிலையுடன் இருக்கும். வேலை டென்ஷனில் இருப்பவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் வேண்டும் என்றால் ஜாலியாக ஒரு டூர் செல்ல ஏற்ற இடம்.
ரிஷிகேஷ்
உத்தராகண்ட் மாநிலத்தின் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இடமான ரிஷிகேஷ் அக்டோபர் மாதத்தில் ஆன்மீக சுற்றுலாவுக்கு, செல்ல வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும். இங்கு யோக மற்றும் தியான மையங்கள் அதிகளவில் இருக்கிறது. ரிஷிகேஷ் உலகின் யோகா தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஆக்ரா
உலகளவில் காதலின் சின்னம் என்றால் உடனே நினைவுக்கு வருவது தாஜ்கஹால் தான். உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் தாஜ்மஹால் உத்தரப் பிரதேசம மாநிலத்தில் அமைந்துள்ளது. பண்டிகை சீசன் கொண்ட அக்டோபர் மாதத்தில் ஆக்ரா நகரம், சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக இருக்கும் என்று சொல்லலாம்.
ஜெய்ப்பூர்
பாலைவனத்திற்கு பெயர் பெற்றது என்றாலும், ராஜஸ்தான் மாநிலம், சுற்றுவலா செல்வதற்கும் ஏற்ற இடங்கள் அதிகம் இருக்கிறது. அற்புத கோட்டைகள் கொண்ட சிட்டியாக இருக்கும் ஜெய்ப்பூர் ராஜஸ்தானி கலாச்சாரத்தை பற்றி தெரிந்துகொள்ள முக்கிய இடங்கள் இருக்கிறது, கண்காட்சிகள் மற்றும் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளுக்கு புது அனுபவமாக இருக்கும்.
ஜோத்பூர்
வட மாநிலமான ராஜஸ்தானில் இருக்கும் மற்றொரு சுற்றுலா தளம் தான் ஜோத்பூர். அற்புதமான மெஹ்ரான்கர் கோட்டை, கோயில்கள் உள்ள இந்த நகரம் கண்களுக்கு விருந்து படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பச்மர்ஹி
மத்திய பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரமான பச்மர்ஹி மலை மற்றும் பசுமைகளால் சூழப்பட்ட அழகிய காடுகள், குகைகள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் உள்ளிட்ட பல அனுபவத்தை கொடுக்கும். மலை பாதைகளில் மலையேற்றம் செல்பவர்கள், மலைகளின் இயற்கை அழகை நீங்கள் அனுபவிக்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.