உலக அளவில் சுமார் இரண்டு பில்லியன் மக்கள் கொழுப்பு கல்லீரல் அல்லது Metabolic Dysfunction-Associated Steatotic Liver Disease (MASLD) பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதற்கு மோசமான உணவுப் பழக்கமே முக்கிய காரணம் என்று டாக்டர் சௌரப் சேத்தி கூறுகிறார். உடல்நலப் பழக்கவழக்கங்கள் வீட்டில் இருந்தே தொடங்குகின்றன, மேலும் உங்கள் ஆரோக்கியத்தை மாற்றியமைப்பதற்கான சிறந்த வழி ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவதாகும் என்கிறார் ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற கல்லீரல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி. கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நான்கு ஸ்நாக்ஸ் காம்பினேஷன்ஸ் பற்றி பட்டியலிட்டுள்ளார். "நான் ஒரு கல்லீரல் நிபுணராக இவற்றை வாரந்தோறும் சாப்பிடுகிறேன்" என்று அவர் யூடியூபில் தெரிவித்துள்ளார்.
டாக்டர் சேத்தி பரிந்துரைக்கும் 4 கல்லீரல் ஆரோக்கிய ஸ்நாக்ஸ் காம்பினேஷன்ஸ்:
பேரிச்சம்பழம் மற்றும் அக்ரூட் பருப்புகள்:
டாக்டர் சேத்திக்கு மிகவும் பிடித்தமான இந்த காம்பினேஷன், உடனடி ஆற்றலைத் தருவதோடு, ஆரோக்கியமான சிற்றுண்டியாகவும் செயல்படுகிறது. மிக்ஸ்டு நட்ஸ் வைட்டமின் ஈ-யை வழங்குகின்றன, இது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
டார்க் சாக்லேட் மற்றும் மிக்ஸ்டு நட்ஸ்:
டார்க் சாக்லேட்டும் கல்லீரலுக்கு நன்மை பயக்கும் என்று டாக்டர் சேத்தி கூறுகிறார். டார்க் சாக்லேட்டுடன் மிக்ஸ்டு நட்ஸ் இணைப்பது ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான விருந்தாகும்.
தேன், ஆப்பிள் மற்றும் இலவங்கப்பட்டை:
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/0E9MwHe9DOQSdJqKIT6j.jpg)
இந்த இணைவு குழந்தைகள் மத்தியில் மிகவும் பிடித்தமானது. தேன், ஆப்பிள் மற்றும் இலவங்கப்பட்டை மூன்றும் தனித்தனியாகவும், இணைந்தும் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
கீரிக் கர்ட் (அல்லது சாதாரண தயிர்) மற்றும் பெர்ரி பழங்கள்:
கிரேக்க தயிர் அல்லது நம் ஊர் தயிருடன் பெர்ரி பழங்களை (ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்றவை) சேர்த்து சாப்பிடுவது ஒரு சக்திவாய்ந்த கலவையாகும் என்று டாக்டர் சேத்தி குறிப்பிடுகிறார்.
நிபுணர்களின் கருத்து என்ன?
பேரிச்சம்பழம், அக்ரூட் பருப்புகள், மிக்ஸ்டு நட்ஸ், டார்க் சாக்லேட், தேன், ஆப்பிள் மற்றும் கிரேக்க தயிர் போன்ற ஸ்நாக்ஸ் பொதுவாக ஆரோக்கியமானவை மற்றும் அவற்றின் ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளடக்கம் காரணமாக கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கும் என்று டாக்டர் அமீத் மண்டோட் தெரிவித்துள்ளார். இந்த உணவுகள் வீக்கத்தைக் குறைக்கவும், செரிமானத்திற்கு உதவவும் கூடும், இவை இரண்டும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானவை என்கிறார் டாக்டர் மண்டோட்.
வெறும் உணவு மட்டுமே போதுமா?
"இருப்பினும், இவை சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக நன்மை பயக்கும் அதே வேளையில், மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக அமையாது" என்று டாக்டர் மண்டோட் எச்சரிக்கிறார். கொழுப்பு கல்லீரல் (MASLD), ஹெபடைடிஸ் அல்லது சிரோசிஸ் போன்ற கல்லீரல் கோளாறுகள் உள்ளவர்கள் எந்தவொரு உணவு அடிப்படையிலான தீர்வை நம்புவதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும்.
கல்லீரல் பிரச்சனைகளை வெறும் உணவு மூலம் மட்டும் நிர்வகிக்க முடியாது என்பதை டாக்டர் மண்டோட் வலியுறுத்துகிறார். மது அருந்துதல், புகைபிடித்தல், பதப்படுத்தப்பட்ட சர்க்கரை மற்றும் கொழுப்பைக் குறைத்தல், நீரேற்றத்துடன் இருப்பது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது ஆகியவை கல்லீரல் ஆரோக்கியத்திற்கு அவசியம். "மருத்துவ வழிகாட்டுதலுடன் கல்லீரல் நோயை நிர்வகிப்பது முக்கியம். அத்தியாவசிய பரிசோதனைகளை செய்து, சரியான நேரத்தில் தலையீடு தொடங்கவும். சிறந்த பலன்களுக்கு நல்ல ஊட்டச்சத்தை எப்போதும் ஒரு மருத்துவரின் ஆலோசனையுடன் இணைக்கவும். ஊட்டச்சத்தை மட்டும் நம்ப வேண்டாம்," என்று அவர் மேலும் கூறினார்.
Read in English: ‘As a gastroenterologist, I eat these 4 snack combinations weekly to improve liver health’