பெண்கள் தனிமையில் இருந்தால் இதையெல்லாம் தான் செய்வார்கள்: அசத்தல் காமிக்ஸ் ஓவியங்கள்

ஓவியர் Yaoyao Ma Van As என்பவர், ஒரு பெண் தனிமையாக இருக்கும்போது என்னவெல்லாம் செய்வார் என்பதை கற்பனையில் ஓவியங்களாக தீட்டியிருக்கிறார்.

தனிமையாக இருத்தல் என்பது ஒருவித வெறுமையைக் கொடுக்கக் கூடியதாக தான் பல சமயங்களில் இருக்கும். ஆனால், நம்மை நாமே காதலிக்கவும், அன்பு செலுத்தவும் பழகிக்கொண்டால் என்றைக்காவது ஒருநாள் தனிமையில் இருக்கும்போது, அப்போது ஏற்படக்கூடிய உணர்வு அலாதியாக இருக்கும். நமக்குப் பிடித்த விஷயங்கள், சின்ன சின்ன ஆசைகளை அப்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும். யாராவது பார்த்துவிடுவார்களா என்ற அச்சம் ஏற்படாமல், பல விஷயங்களை தனிமையில் இருக்கும்போது அனுபவித்துக்கொள்ளலாம்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்துவரும் ஓவியர் Yaoyao Ma Van As என்பவர், ஒரு பெண் தனிமையாக இருக்கும்போது என்னவெல்லாம் செய்வார் என்பதை கற்பனையில் காமிக்ஸ் ஓவியங்களாக தீட்டியிருக்கிறார். உண்மையில் பெண் ஒருவர் தனிமையில் இருக்கும்போது, இப்படித்தான் தன் வாழ்க்கையை சிறு சிறு விஷயங்களால் அழகாக்கிக் கொள்வாரோ என நமக்கே தோன்றும் வகையில் அவரது ஓவியங்கள் உள்ளன.

பூனையுடன் விளையாடுதல், இரவில் நட்சத்திரங்களை ரசித்தல், வீட்டை விரும்பி சுத்தம் செய்தல், சத்தமாக இசையை கேட்டல் என அவருடைய ஒவியங்கள் ஒவ்வொன்றும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன.

×Close
×Close