/indian-express-tamil/media/media_files/2025/04/26/gdMt9UOxivKOG8ZZlmED.jpg)
Lizard repellent home remedies cockroach control tips
நம்மில் பலரும் வீட்டை எவ்வளவுதான் சுத்தமாக வைத்திருந்தாலும், பல்லி மற்றும் கரப்பான் பூச்சி தொல்லை என்பது ஒரு தொடர்கதையாகவே இருக்கும். அவை நம்மைச் சுற்றி வந்து தொல்லை கொடுப்பது மட்டுமல்லாமல், சில நேரங்களில் பயமுறுத்தவும் செய்யும். குறிப்பாக கரப்பான் பூச்சிகள் பகலில் எங்கு ஒளிந்திருக்குமோ தெரியாது, ஆனால் இரவு நேரங்களில் லைட் ஆஃப் செய்தவுடன் எங்கிருந்தாவது வந்துவிடும். உங்கள் வீட்டிலும் இந்த தொல்லை இருக்கிறதா? அப்படியென்றால், இந்த எளிய இயற்கை முறைகள் மூலம் நீங்கள் இந்த தொல்லையிலிருந்து விடுபடலாம்.
பல்லிகளை விரட்ட எளிய வழிகள்
முட்டை ஓடுகளிலிருந்து வரும் வாசனை பல்லிகளுக்குப் பிடிக்காது. எனவே, பல்லிகள் அடிக்கடி காணப்படும் இடங்களில் காலியான முட்டை ஓடுகளை வைக்கவும். இதன் மூலம் பல்லிகளின் நடமாட்டம் குறைய ஆரம்பிக்கும்.
துணிகளில் நறுமணத்திற்காகப் பயன்படுத்தப்படும் நாப்தலின் உருண்டைகளை பல்லிகள் நடமாடும் இடங்களில் வைக்கவும். இந்த வாசனை பல்லிகளுக்கு சுத்தமாகப் பிடிக்காது.
மிளகை நன்றாக அரைத்து, அதனுடன் நீர் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்துக்கொள்ளவும். இந்த கரைசலை பல்லிகள் இருக்கும் இடங்களில் தெளித்தால், மிளகின் காரமான வாசனைக்கு அவை அங்கிருந்து விலகிவிடும்.
வெங்காயம் மற்றும் பூண்டின் வாசனையும் பல்லிகளுக்குப் பிடிக்காது. வீட்டின் மூலைகளிலோ அல்லது காற்றோட்டமான இடங்களிலோ இவற்றை வைக்கலாம். இதன் வாசனையால் பல்லிகள் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது.
கரப்பான் பூச்சிகளை ஒழிக்க எளிய வழிகள்:
கரப்பான் பூச்சி தொல்லைக்கு வீட்டின் சுற்றுப்புறம், கழிவறை மற்றும் குளியலறைகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். பெண் கரப்பான் பூச்சிகள் உணவுப் பொருட்களின் மீது முட்டையிடுவதால், அதன் மூலம் பூஞ்சைகள் உருவாகி மனிதர்களுக்கு தொற்று நோய்கள் பரவக்கூடும்.
உணவுப் பொருட்களை எப்போதும் நன்றாக மூடி வைக்க வேண்டும்.
கரப்பான் பூச்சிகள் வெளிச்சம் படாத, மறைவான இடங்களான சுவர்களின் இடுக்குகள், வெடிப்புகள் மற்றும் சிறு துளைகளில் ஒளிந்து இனப்பெருக்கம் செய்யும். எனவே, இந்த பொந்துகளை அடைத்துவிட வேண்டும்.
ரசாயன பூச்சிக்கொல்லிகளுக்கு பதிலாக, இயற்கை முறையில் கோதுமை மாவுடன் சிறிதளவு போரிக் பவுடர் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து, கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடங்களில் வைக்கவும். இந்த கலவை கரப்பான் பூச்சிகளை முழுமையாக அழிக்க உதவும்.
இந்த எளிய மற்றும் இயற்கையான முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள பல்லி மற்றும் கரப்பான் பூச்சி தொல்லையிலிருந்து நீங்கள் விடுபடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.